பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/535

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புறத்திரட்டு

531

புறப்பொருள் வெண்பா


சுவாமிகள். காலம் 19ஆம் நூற்றாண்டு.

புறத்திரட்டு = இந்நூல் ஒரு தொகை நூல். இந்நூலில் பல நூல்களினின்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள் உள்ளன. இத்தொகை நூலால் இறந்துபட்ட சில நூற்களின் பெயர்களையும், பாடல்களையும் அறியலாம். இது முறைப்படத் தொகுக்கப்பட்டுள்டுள்ளது. திருக்குறள் போன்ற நூல்களில் உள்ள தலைப்புக்களை போன்று தலைப்புக்களைப் பெற்று அத்தலைப்பின் கீழ் பன்னூல்களின்று எடுக்கப்பட்ட பாடல்கள் தரப்பட்டுள்ளன. இந்நூல் ஆராய்ச்சியாளருக்குப் பெருந்துணை செய்யவல்லது. இதனை இம்முறையில் தொகுத்தவர் யாவா் என்பது அறிதற்கு இல்லை.

புறநாநூறு = சங்கம் மருவிய எட்டுத்தொகை நூற்களுள் ஒன்று. இதில் நாநூறு பாடல்கள் உண்டு. புறப்பொருளைப் பற்றிக் கூறும் நூல். இதில் பல புலவர்களின் பாடல்கள் காணப்படும். அப் புலவர்கள் ஆண் பாலராகவும், பெண்பாலராகவும், பல சாதியினராகவும், அரசர்களாகவும், பல தொழிலினராகவும், குறுநில மன்னர்களாகவும் உள்ளனர். இந்நூல் பண்டைத் தமிழ் நாட்டின் பெருமை, மக்களின் நாகரிகம் முதலியன அறிதற்குப் பெருந்துணை செய்யவல்லது. நீதிகளும் அரிய கருத்துக்களும் அடங்கிய நூல். இதன்மூலம் பண்டைக் காலத்து மக்களைப் பற்றியும், வள்ளல்களைப் பற்றியும், அரசர்களைப் பற்றியும் நன்கு அறியலாம். இதற்கு உரை உண்டு. ஆனால் உரையாசிரியர் பெயர் தெரிந்திலது. காலம் கடைச்சங்க காலம்.

புறப்பொருள் வெண்பாமாலை = இது வெட்சி, கரந்தை, வஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை முதலான புறப்பொருட்களைப் பற்றி வெண்பாவால் பாடப்பட்ட நூல். இந்நூலால் தமிழ் நாட்டுப் போர்முறை, வீரச்சிறப்பு முதலியன அறியலாம். இதன் ஆசிரியர் ஐயனாரிதனார். காலம் கி.பி.9-ஆம் நூற்றாண்டு.