பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/538

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மக்கள் நூற்றாண்டு

534

மதிவாணன்


பற்றிக் கூறுவது. இந்நூலால் துறவிகளின் இயல்பு, வைராக்கிய சிந்தை போன்ற கருத்துக்கள் நிரம்ப உள்ளன. இதனைப் பாடியவர் சாந்தலிங்க சுவாமிகள். காலம் 17ஆம் நாற்றாண்டு.

மக்கள் நூறாண்டு வாழ்வது எப்படி? = இது ஒரு வசன நூல். இந்நூல் வாயிலாக மக்கள் உடலை ஒம்பும் விதத்தையும், உணவு கொள்ளும் முறையையும், மற்றும் பல குறிப்புக்களை அறியலாம். இந்நூலில் கூறப்பட்ட முறையில் சிறிதும் வழுவாது வாழ்க்கையை நடத்தினால் உலகில் நூறாண்டுகள் உயிருடன் வாழலாம் என்பதை நன்கு தெற்றத் தெளிய அறிந்து கொள்ளலாம். இதனை எழுதியவர் சுவாமி வேதாசலம் என்ற மறைமலை அடிகள். காலம் 20 ஆம் நூற்றாண்டு.

மணிமேகலை = ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று. கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மணிமேகலையின் வரலாற்றைக் கூறுவது. மணிமேகலை துறவு பூண்டு வாழ்ந்த காரணத்தால் இது மணிமேகலை துறவு என்றும் கூறப்படும். இது பௌத்த மதக் கொள்கைகள் பலவற்றை ஆங்காங்கு விளக்கிச் செல்கிறது. இதன் மூலம் தமிழ்நாட்டு வரலாற்றுக் குறிப்புக்கள் பலவற்றைக் காணலாம். யாக்கை நிலையாமை, இளமை நிலையாமை முதலியன வெகு தெளிவாகக் விளக்கப்பட்டுள்ளன. நீதிகள் பலவும் கூறப்பட்டுள்ளன. கற்புடை மாதர் செயல்களும் இதில் உள்ளன. இதனை எழுதியவர் கூலவாணிகச் சீத்தலைச் சாத்தனார். காலம் கடைச்சங்க காலம். இந்நூலைக் குறித்துச் சிறந்த முறையில் ஒர் ஆராய்ச்சி நூலும் வெளிவந்துள்ளது. அதனை எழுதியவர் ஒளவை துரைசாமிப்பிள்ளை என்பவர்.

மதிவாணன் = இது ஒர் உரைநடை நூல். பெரிதும் பிறமொழி கலவாது தூய தமிழ் நடையில் எழுதப்பட்ட நூல். உயர்ந்த கம்பீரமான நடையுடையது. படிக்கப் படிக்க இனிமை தருவது. ஆசிரியர் பரிதிமால் கலைஞர். காலம் கி. பி. 20 ஆம்