பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/540

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனுமுறை கண்ட536

மனோன்மணியம்




யப்பாவால் ஆனது. மலைக்கு யானையை உவமானமாகக் கூறி அதனிடம் பிறந்த ஒசையைக் கடாம் எனச் சிறப்பித்ததனால் இது மலைபடுகடாம் என்ற பெயரைப் பெற்றது. பரிசில் பெற வரும் கூத்தன் ஒருவனைப் பரிசில் பெற்றான் ஒருவன் செய்கண்மாத்துவேள் நன்னன் சேய் நன்னனிடத்தில் ஆற்றுப்படுத்தியதாக அம்மன்னனை இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கவுசிகனார் பாடினார். காலம் கடைச்சங்க காலம். இதற்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரை உண்டு.

மனுமுறை கண்ட வாசகம் = இது ஒர் உரைநடை நூல். மனுநீதி கண்ட சோழனது வரலாற்றைப் பெரியபுராணத்தைத் தழுவி எழுதப்பட்டதால், இதன் வாயிலாக ஆசிரியர், சோழ நாட்டின் சிறப்பு, பசுவின் மாண்பு, அரசன் கடமை, மந்திரியின் மாண்பு, மக்கள் செய்யக் கூடாத தீமைகள் முதலானவற்றை அழகாகக் குறித்து இராமலிங்க சுவாமிகள் எழுதியுள்ளார். இவ்வரிய நூலை எழுதியவர் காலம் 19 ஆம் நூற்றாண்டு.

மனோன்மணியம் = இது நாடக நூல். பெரிதும் ஆசிரியப்பாவால் ஆனது. வேற்றுப் பாக்களும் சில உண்டு. இது ஆங்கில நூலின் நாடக அமைப்பு முறையில் களம், அங்கம், முதலிய உறுப்புகளைக் கொண்டது. இதில் கடவுள் வாழ்த்துத் தமிழ்த் தாய் வாழ்த்து. அதன் மூலம் தமிழின் பெருமை திறம்படக் கூறப்பட்டுள்ளது. அக்கடவுள் வாழ்த்தில் கன்னடம்,தெலுங்கு, மலையாளம், முதலான மொழிகள் தமிழ்மொழியின் சேய்கள் என்பதையும், தமிழ்மொழி அவற்றின் தாய் என்பதையும் குறித்திருப்பதை நன்கு தெரியலாம். இதில் உள்ள சிவகாமி சரிதை படித்து இன்புறுதற் குரியது. இந்நூல் முழுமையும் ஆங்கில நூலைத் தழுவி எழுதப்பட்டது. ஆசிரியர் சுந்தரம்பிள்ளை. காலம் 19ஆம் நூற்றாண்டு. தாவரத்தைப் பற்றியும், வாய்க்காலைப் பற்றியும், நாங்கூழ்ப் புழுவைப் பற்றியும் கூறும்