பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/541

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாணிக்கவாசகர்

537

மீனாட்சிசுந்தரம் பிள்ளை


இடங்களில் பல உண்மைகளை இந்நூல் எடுத்துக்காட்டுகிறது. அதன் வாயிலாக சமயக் கருத்துகள் பல அறிய வருகின்றன.

மா

மாணிக்கவாசகர் காலம்= இது ஒரு சிறந்த உரை நடைநூல். இந்நூலில் மாணிக்கவாசகர் எக்காலத்தில் திகழ்ந்தார் என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது. இந்நூல் தமிழ் நாட்டில் திகழ்ந்த பல மாபெரும் புலவர்களின் காலங்களும் திட்டவட்டமாகக் குறிக்கப்பட்டுள்ளன. அகத்தியர், தொல்காப்பியர், சைவ சமய ஆசிரியர்கள், வைணவ சமய ஆசிரியர்கள் மற்றும் பல ஆசிரியர்களின் காலங்களும் எழுதப்பட்டுள்ளன. தமிழ் மொழி ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்களுக்கு இது ஒரு பெருந்துணையாகும். எழுதியவர் சுவாமி வேதாசலம் என்னும் மறைமலை அடிகள். காலம் கி.பி.20 ஆம் நூற்றாண்டு. இந் நூலாசிரியர் ஒவ்வொரு நூலையும் எழுத்தெண்ணிச் சொல்லெண்

68

ணிப் படித்தவர் என்பதற்குரிய சான்றுகள் பலவற்றை இதன்கண் அறிந்து கொள்ளலாம்.

மாறன்அலங்காரம் = இது தமிழ் மொழிக்குரிய அணி இலக்கணத்தை அழகுபடக் கூறும் நூல். சூத்திர யாப்பால் அமைந்தது. தொல்காப்பியத்தில் சுருக்கமாகச் சொல்லியவற்றை விரிவாக விளக்கும் நூல். தக்க உதாரணங்கள் காட்டி எழுதப்பட்டது. ஆசிரியர் குருகைப்பெருமாள் கவிராயர். கி.பி.16 ஆம் நூற்றாண்டு.

மீ

மீனாட்சிசுந்தரம்பிள்ளை சரித்திரம்= இது ஒரு வசனநூல். திரிசிரபுரம் மகா வித்துவானும், திருவாவடுதுறை ஆதீன வித்துவானும் ஆன மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் குறிக்கும் நூல். இந்நூல் எழுதியவர்,மேற்படி பிள்ளையவர்களின் மாணவர்களில் ஒருவராகிய டாக்டர் உ.வே. சுவாமிநாத அய்யர் ஆவார். இதன் வாயிலாக திரு அய்யர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும்