பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/542

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மீனாட்சிசுந்தரம்பிள்ளை

538

மீனாட்சியம்மை


அறிந்து கொள்ளலாம். அரிய குறிப்புக்கள் இதில் உண்டு. காலம் 20ஆம் நூற்றாண்டு.

மீனாட்சிசுந்தரம்பிள்ளையவர்கள் பிரபந்தம் = இதில் மகாவித்துவான் திருவாடுதுறை ஆதின வித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளளையவர்கள் பாடியுள்ள கலம்பகம், அந்தாதி, பிள்ளைத்தமிழ், சிவபுராணம் முதலானவற்றை ஒன்று சேர்த்து, அன்னர் மாணவர் டாக்டர் உ.வே. சுவாமிநாத அய்யர் வெளியிட்டுள்ள ஒரு தொகை நூலாகும். பிரபந்தத் திரட்டால் ௸ பிள்ளை அவர்களின் பிரபந்த நூற்புலமையும், கவிபாடும் பேராற்றலையும் மற்றும் பல சிறப்புக்களையும் அறியலாம். காலம் கி.பி.19 ஆம் நூற்றாண்டு.

மீனாட்சி அம்மை கலிவெண்பா = கலி வெண்பா என்பது வெண்பா வகையுள் ஒன்று. பல அடிகளைக் கொண்டது. அப் பா அமைப்பில் மதுரை மீனாட்சி அம்மையார் மீது பாடப்பட்டமையின் இப்பெயர் பெற்றது. இந்நூலே அம்மையார் தம் மீது பாடும்படி கட்டளையிட்ட காரணத்தால் இது பாடப்பட்டது. தேவியின் திருவருளைப் பெறுதற்கும் துணை செய்யும் நூல். இந்நூலைப் பாடியவர் மதுரை சிதம்பர சுவாமிகள். கி.பி 17 ஆம் நூற்றாண்டு.

மீனாட்சி அம்மை குறம் = குறம் என்பது குறத்தி குறி சொல்லும் முறைகளைப் பற்றி பாடப்படும் நூலாகும். இது மதுரை மீனாட்சி அம்மையின் மீது பாடப்பட்டமையின் இப்பெயர். இந்நூல் குறத்தியர் வாழ்க்கை, மலைவளம் முதலானவற்றை அறிவிக்கும் நிலையில் அமைந்துள்ளது. மீனாட்சியம்மையார் தடாதகை பிராட்டியாராக மதுரையை அரசாண்ட போது விளங்கிய நிலைகளும் இதில் உண்டு. குமரகுருபர சுவாமிகள் இதனைப் பாடினார். காலம் கி.பி.17ஆம் நூற்றாண்டு.

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் = மதுரை மீனாட்சியம்மை மீது குமரகுருபர சுவாமிகளால் பாடப்பட்ட நூல். இந்நூலிலுள்ள வருகைப் பருவத்தில் அமைந்த "தொடுக்கும்