பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/545

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முல்லைப்பாட்டு

541

மூத்த நாயனர்


ஆசிரியர் யார் என அறிதற்கில்லை.

முல்லைப்பாட்டு = இது சங்க மருவிய பத்துப்பாட்டில் ஒன்று. இதன் மூலம் பிரிந்த தலைமகன் திரும்பும் அளவும் தலைவி ஆற்றியிருந்தமையும், அவன் வருகையைக் கண்டு தோழி கூறுவதையும் அறியலாம். இதனைக் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வணிகர் மகனர் நப்பூதனர் பாடியருளினர். 103 அடிகளைக் கொண்டது. இதன் மூலம் பல அரிய குறிப்புகளை அறிந்து இன்புறலாம். நிமித்தம் பார்க்கும் வழக்கமும் பெண்கள் அரசனது பாடி விட்டில் அவனுக்குக் காவல் பெண்களாக இருந்து காத்து வந்தனர் என்பதும், யவனர்கள் காவல்காரர்களாவும் அமைக்கப்பட்டனர் என்ற செய்தியும், ஊமையர்களான மிலேச்சர் அரசன் பள்ளிகொள்ளும் இடத்தில் காவல் காத்தனர் என்ற செய்தியும் அறிந்து இன்புறலாம். காலம் கடைச்சங்க காலம். இதற்கு நச்சினார்க்கினியர் உரை உண்டு. இத்தகைய நூலுக்கு அழகுக்கு அழகு செய்வது போல மறைமலை அடிகள் முல்லைப்பாட்டு ஆராய்ச்சி என்ற நூலையும் எழுதியுள்ளார்.

மூ

மூத்த திருப்பதிகம் = சைவத் திருமுறைகள் பன்னிரண்டனுள் பதினோராம் திருமுறையில் இரண்டாவது நூலாகத் திகழும் பெருமையுடையது. தேவாரப் பதிகங்களே திருப்பதிகம் என்னும் சிறப்புக்குரியனவாக இருத்தலின், அத்தேவாரப் பதிகங்களை நோக்க இப்பதிகம் முன்னர்த் தோன்றினமை கருதி, இதற்கு மூத்த திருப்பதிகம் என்ற பெயரை ஈந்தனர். இது திருவாலங்காட்டின் இறைவர் மீது காரைக்கால் அம்மையார் பாடிய திருப்பதிகமாகும். இதன் காலம் அப்பர், சம்பந்தர் சுந்தரர் ஆகிய மூவருக்கும் முற்பட்ட காலம். ஆகவே,கி.பி.7 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது.

மூத்த நாயனர் இரட்டை மணிமாலை = இது சைவத்திருமுறை பன்னிரண்டனுள் பதினோராவது திரு