பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/546

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூத்த பிள்ளையார்

542

மெய்கண்ட சாத்திரம்


முறையில் அமைந்ததாகும். இது விநாயகப் பெருமான் மீது பாடப்பட்டது. இளைய நாயனர் என்று முருகப் பெருமானைக் குறித்து பேசப்படுதலின், ஈண்டு மூத்த நாயனர் என விநாயகப் பெருமான் குறிப்பிடப்பட்டார். இதனைப் பாடியவர் கபிலதேவ நாயனர். விநாயகரைப் பற்றிய குறிப்புச் சங்கநூற்களில் எங்கும் இல்லை. ஆகவே, இங்குக் குறிப்பிடப்பட்ட கபிலதேவ நாயனார் என்பவர் சங்ககாலக் கபிலராக இரார் என்பது ஆராய்ச்சியாளர் துணிபு. ஆகவே, காலம் உறுதியாகக் கூறுவதற்கில்லை.

மூத்த பிள்ளையார் பிள்ளைத்தமிழ் = இதுவும் பதினோராம் திருமுறையாக அமைந்த நூலாகும். இதனைப் பாடியவர் அதிராவடிகள். காலம் அறிவதற்கு இல்லை.

மூன்றம் திருவந்தாதி = நாலாயிரப் பிரபந்தத்தில் உள்ள ஒரு பகுதி. 100 வெண்பாக்களைக் கொண்ட நூல். திருமால் மீது பாடப்பட்ட தோத்திர நூல். ஆசிரியர் பேயாழ்வார். காலம் கி.பி.8 ஆம் நூற்றாண்டு. பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரும் அந்தாதி பாடியுள்ளமையின் அவைகளுள் இவ்வந்தாதி மூன்றாவதாக அமைந்திருத்தலின், இது மூன்றம் திருவந்தாதி எனப்பட்டது.

மெ

மெய்கண்ட சாத்திரம் = இந்நூலுக்கு அமைந்திருக்கும் பெயரைக் கொண்டே இந்நூலின் அருமை பெருமைகளை உணர்ந்து கொள்ளலாம். இது ஒரு தொகுப்பு நூல். பதி, பசு பாசங்களைப் பற்றிய சைவசித்தாந்தத்தின் தெளிவை நன்கு விளக்கும் நூல். இந்நூற்களைவிடத் தெற்றத் தெளிய சைவசித்தாந்த உண்மைகளை ஒழுங்காகத் தர்க்க முறைப்படி காரணங்களுடன் கூறத்தக்க நூல்கள் எவையும் இல்லை என்னலாம். இவற்றிற்குப்பின் வந்த பிற நூல்கள் அக்கருத்துக்களைக் கூறினாலும் கருத்துக்களுக்கு அடிப்படை இந்நூற்களே அன்றி வேறு அல்ல. இந்நூலில் திருவுந்தியார்