பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/551

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிவேற்கை

547

வைராக்கிய சதகம்


பிரகாச சுவாமிகள். காலம் கி.பி.18-ஆம் நூற்றாண்டு.

வெற்றிவேற்கை = நீதிகளை உணர்த்தும் நூல். இது நறுந்தொகை என்றும் கூறப்பெறும். அதிவீரராம பாண்டியரால் பாடப்பட்டது. வெற்றிவேற்கை என்று இந்நூலின் முதற்செய்யுள் தொடங்கலின் இப்பெயர் கொடுக்கப்பட்டது. காலம் கி.பி.10 ஆம் நூற்றாண்டு.

வே

வேம்பத்தூரார் திருவிளையாடல் = இது பழைய திருவிளையாடற் புராணம் என்றும் கருதப்படும். மதுரைச் சொக்கலிங்கப் பெருமானது திருவிளையாடல்களை அறிவிப்பது பெரும்பற்றப்புலியூர் நம்பிகள் பாடியது. காலம் கி.பி.12-ஆம் நூற்றாண்டு. இந்நூால் அமைப்பிற்கும் பரஞ்சோதியார் திருவிளையாடற் புராண அமைப்புக்கும் வேறுபாடு நிரம்ப உண்டு.

வேளாளர் நாகரிகம் = இது ஒர் உரைநடை நூல். இதில் வேளாளர் மாண்பும், தமிழ்நாட்டின் நாகரிகமும், நன்கு தெரிவிக்கப்பட்டுள்ளன. வேதத்தில் கூறப்பட்ட செய்திகள் என்ன என்பதைப் பரக்க எடுத்துக் காட்டியும் விளக்கும் நூல். ஆராய்ச்சி செய்பவர்க்குத் துணையாயது. ஆசிரியர் மறைமலை அடிகள். காலம் கி.பி.20-ஆம் நூற்றாண்டு.

வை

வைராக்கிய சதகம் = இது வேதாந்த நூல். இதனைத் திருத்துறையூர்ச் சாந்தலிங்க சுவாமிகள் பாடி அருளினர். வைராக்கிய தீபமும் இவரால் பாடப்பட்டதே. இவற்றிற்குச் சிறந்த முறையில் பல மேற்கோள்களைக் காட்டி விரிவான முறையில் திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் உரை எழுதியுள்ளார். காலம் 17-ஆம் நூற்றாண்டு.

நூல் அகராதி முற்றிற்று