பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/553

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் அகராதி


அகத்தியர் = இவர் தமிழ் முனி, குறுமுனி என்றும் கூறப்படுவர். இவர் வட நாட்டிலிருந்து தென்னாடு வந்தவர். இமயமலையில் சிவபெருமானுக்குத் திருமணம் நடக்கும்போது, தேவர்களும் மற்றுமுள்ளவர்களும் ஒருங்கே திரண்டு கூடியதால் வடகோடு தாழ்ந்தது. தென்கோடு உயர்ந்தது. அதுபோது இவர் சிவபெருமானால் தென்னாட்டுக்கு அனுப்பப்பட்டாா. அப்படி வந்தவர் பொதிகை மலையில் தங்கினார். இதனால் இவர் பொதிகை முனிவர் என்றும் கூறப்படுவார். இவர் கும்பத்தில் பிறந்ததனால் கும்பமுனி எனவும் அழைக்கப்படுவார். வடிவில் குறுகிக் காணப்பட்டதால் குறுமுனி என்றும், சிவபெருமானிடம் தமிழ் மொழி பயின்று, இலக்கணம் செய்ததால் தமிழ் முனி என்றும் கூறப்பட்டவர். இந்திரனது பகைவனான விருத்திரா சூரன் கடலில் ஒளிந்துகொள்ள, அவனை வெளிப்படுத்தக் கடலைத் தம் உள்ளங்கையில் அடைத்தவர். இவர் 12000 நூற்பாக்கள் அடங்கிய இ ல க் க ண நூலைச் செய்தவர் என்பர். அதுவே பேரகத்தியம் எனப்படும். ஆனால் அவற்றுள் பல மறைந்து போக வெகு சில சூத்திரங்களே இதுபோது கிடைத்துள்ளன. சோதிடம், வைத்தியம் சம்பந்தமாக நூல்களையும் செய்தவர். தலைச்சங்கத்தில் ஒரு புலவராகத் திகழ்ந்தவர். இவரது மனைவியார் உலோபாமுத்திரை. காவிரியாறு உண்டானதற்கு இவர் காரணர். இவர் வேத பாடல்களையும் செய்ததாகக்கூறுவர்.

அகோர சிவாச்சாரியார் = இவர் சிதம்பரத்தில் வாழ்ந்த ஆதி சைவ பிராமணர். இவர் வெற்றிவேற்கை செய்த அதிவீரராம பாண்டியரின் ஆசிரியர் ஆவார். அகோர பத்ததி என்னும் நூலைச் செய்தவர். கி.பி.16-ஆம் நூற்றாண்டினர்.

அகோர முனிவர் = இவர் வடமொழி தென்மொழி அறிந்தவர். திருவாரூர் தேவாலயத்தில் அபிடேகக் கட்டளையை நடத்தி வந்தவர். கி.பி.17-ஆம் நூற்றாண்டினர். இலக்கண விளக்க வைத்திய