பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/554

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அசலாம்பிகை

550

அண்ணாமலை ரெட்டியார்


நாத தேசிகர் ஆசிரியர். கும்பகோணப் புராணம், திருக்கானப்பேர் புராணம், வேதாரண்ய புராணம் இயற்றியவர். இவரை அகோரதேவ முனிவர் என்றும் கூறுவர்.

அசலாம்பிகை அம்மையார் - பிராமண வகுப்பினர். காந்தி புராணம், இராமலிங்க சுவாமிகள் புராணம் பாடியவர்‌. காலம் கி.பி.20-ஆம் நூற்றாண்டு.

அடியார்க்கு நல்லார் = இவர் சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதியவர். நிரம்பையூர் என்னும் ஊரினர். இவரைப் பொப்பண்ண காங்கேயன் என்பவன் ஆதரித்து வந்தான். இவர் தமது வாழ்க்கையைத் திருவாரூருக்கு அருகில் உள்ள தீபங்குடியில் நடத்தியவர். கி.பி.13-ஆம் நூற்றாண்டினர்.

அட்டாவதானி சுப்பிரதீபக் கவிராயர் = இவர் வைணவர். கம்மாள சாதியினர். திருவரங்கத்தில் பிறந்தவர். கூளப்ப நாயகன் காதல், விறலி விடுதுாது என இரண்டு நூற்களை இயற்றியவர். காலம் கி.பி.18-ஆம் நூற்றாண்டு.

அணிலாடு முன்றிலார் = சங்க காலத்தவர். முன்றிலை வர்ணிக்கையில் அணில் ஆடும் முன்றில் எனச் சிறப்பித்துப் பாடிய காரணத்தால் இப்பெயர் பெற்றார். இவரது பாடல் ஒன்று குறுந்தொகையில் உள்ளது. இவர் பெண்பாலராக இருக்கலாமோ என்று யூகிக்கப்படுகிறது.

அண்டர்மகன் குறுவழுதியார் = சங்க காலத்தவர். இவர் பாண்டிய மரபினர். இவரது பாடல்கள் அகநானுாற்றில் இரண்டும், குறுந்தொகையில் ஒன்றும், புறநானுற்றில் ஒன்றும் உள்ளன.

அண்ணாமலை ரெட்டியார் = இவர் பாண்டிய நாட்டுக் கரிவலம் வந்த நல்லுருக்கு அடுத்த சென்னிக்குளம் என்னும் ஊரினர். ஊற்றுமலை ஜமீந்தாரிடம் ஆஸ்தான புலவராய்த் திகழ்ந்தவர். இவர் பாடிய நூற்கள் காவடிச்சிந்து, சங்கர நாராயண கோயில் திரிபு அந்தாதி, நவநீத கிருஷ்ணன் பிள்ளைத்தமிழ். அவற்றுள் காவடிச்சிந்து படிக்கப் படிக்கச் சுவை தருவதோடு பேரின்பச் சுவை