பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/556

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அநதாரி

552

அபிராமிப்பட்டர்


இவர் 16-ம் நூற்றாண்டினர்.

{bold|அநதாரி}} = இவர் மதுரை கிருஷ்ணவீரப்ப நாயக்கர் அமைச்சர் சனிப்பெருமாள் திருமகனார்; தொண்டை நாட்டுப்புலவர். சுந்தர பாண்டியம் என்னும் நூல் இவரால் செய்யப்பட்டது. காலம் கி.பி.16ஆம் நூற்றாண்டு.

அநந்த கவிராயர் = மதுரைப் பதிற்றுப்பத்து அந்தாதியின் ஆசிரியர்.(இதனைப் பரஞ்சோதி முனிவர் இயற்றியதாகவும் கூறுவர்.) காலம் தெரியவில்லை.

அநவரத விநாயகம் பிள்ளை = நல்ல தமிழ்ப் புலமையும், ஆங்கிலப் புலமையும் பெற்றவர். எம்.ஏ.பட்டம் பெற்றவர். திருநெல்வேலியில் பிறந்தவர். இவர் தலைமையில் சில காலம் தமிழ் லக்ஸிகன் தொகுக்கப்பட்டது. பல வசன நூல்களை எழுதியவர். ஒளவையார், தமிழ்ப் பெருமக்கள் வரலாறு, சைவசித்தாந்தம் முதலியன இவர் எழுதிய நூற்கள். கி.பி.20ஆம் நூற்றாண்டினர்.

அந்தகக்கவி வீரராகவ முதலியார் = இவர் வேளாளர். கி.பி.17-ஆம் நூற்றாண்டினர். காஞ்சிபுரத்தை அடுத்த புதூரில் பிறந்தவர். வடுகநாத முதலியாரின் திருமகனார். இலங்கை பரராசசேகரனிடம் பல பரிசு பெற்றவர்; பிறவிக் குருடர். முதுகில் பிறரை எழுதச்சொல்லிக் கல்வி பயின்று புலமை பெற்றவர். கழுக்குன்ற புராணம், கழுக்குன்றமாலை, சேயூர் முருகன் பிள்ளைத் தமிழ், திருவாரூர் உலா, கயத்தாற்றரசன் உலா, சந்திரவாணன் கோவை முதலியன இவர் எழுதிய நூற்கள். இவர் எழுதிய சீட்டுக் கவி ஒன்றில் குதிரைக்குரிய பல சொற்களைச் சமத்காரத்துடன் குறித்திருப்பது படித்து இன்புறுதற்குரியது.

அந்தி இளங்கீரனார் = சங்க காலத்தவர். அந்திக் காலத்தை வர்ணித்துப் பாடிய காரணத்தால் இப்பெயர் பெற்றார். இவரது பாடல் அகநாநூற்றில் உள்ளது.

அபிராமிப்பட்டர் பட்டர் = இவர் பிராமணர். சரபோஜி மகாராசரது அரசாங்கப் புலவர். திருக்கடவூர்