பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/557

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்பர்

553

அப்பர்


தேவியான அபிராமி அம்மையார் மீது‌ அபிராமி அந்தாதி என்னும் நூலைப் பாடியவர். தேவி கடாட்சத்தால் அமாவாசையில் பூரண சந்திரனைக் காட்டியவர். கி.பி.18-ஆம் நூற்றாண்டினர்.

அப்பர் = இவர் சைவ வேளர்ளர். திருவாமூரில் பிறந்தவர். இவரது பெற்றோர் புகழனார் மாதினியார் என்பவர். இவரது தமக்கையார் திலகவதியார். சைவ சமயத்தினர். சில காலம் சமண சமயத்தில் இருந்தவர். அதுபோது சூலை நோய் வர அதனைப் போக்கிக் கொள்ள மீண்டும் சைவ சமயம் புகுந்தவர். இவர் கொல்ல வந்த யானையைக் குனியச் செய்தவர். விஷத்தையுண்டும் சாவாதவர். சுண்ணாம்பு அறையில் அடைக்கப்பட்டும் இறவாதவர். கல்லொடு கட்டிக் கடலில் இட்டும் அழுந்தாது கரை ஏறியவர். இவ்வளவு துன்பங்களையும் இவருக்கு இழைத்தவர்கள் சமணர்கள்.அந்தணராகிய அப்பூதியடிகளாரால் குலதெய்வமாகப் போற்றிப் பூசிக்கப்பட்டவர். அப்பூதியார் மகன் பாம்பு கடித்து

70

இறக்க அவனை எழுப்பியவர். திருமறைக்காட்டுத் தேவாலயக் கதவைத் திறந்தவர். பொன்னையும் மாதரையும் வெறுத்தவர். திருஞான சம்பந்தரின் நண்பர். இவருக்குத் தாண்டகவேந்து, திருநாவுக்கரசர், வாகீசர். ஆளுடைய அரசுகள் என்ற பல பெயர்களும் உண்டு. பல தலங்களை வணங்கிப் பதிகம் பாடியவர். இவர் பாடிய பதிகங்கள் சைவத் திருமுறைகளில் 4,5,6 எனத் திகழ்கின்றன. இவரது காலம் கி.பி.7 ஆம் நூற்றாண்டு. இவர் பாடிய பதிகங்கள் 49000 என்பர். ஆனால் 311 பதிகங்களே இதுபோது உள்ளன. இவரது காலத்துப் பல்லவ மன்னன் மகேந்திரவர்மன். இவரது பதிகங்கள் திருத்தாண்டகம், திருநேரிசை, திருவிருத்தம், திருக்குறுந்தொகை என்ற தலைப்பினைப் பெற்றிருக்கும். இவரைப்பற்றி,"என்னப்பன் என்னைப் பாடினான்" என்று சிவபெருமானே சிறப்பித்துக் கூறியதாகக் கூறப்படுகிறது. திருப்புகலூரில் இறைவன் திருவடி நீழலை அடைந்தவர். 81 ஆண்டு