பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/559

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அம்மூவனார்

555

அரசஞ்சண்முகனார்


அம்மூவனார் 555 அரசஞ்சண்முகனார்


ஒரு கோவை பாடியுள்ளார். அது அம்பிகாபதி கோவை எனப்படும். இவர் கி.பி. 12-ஆம் நூற்றாண்டினர். பல தனிப்பாடல்களும் இவரால் பாடப்பட்டுள்ளன.

அம்மூவனார் = சங்க காலத்தவர். இவரால் பாடப்பட்ட வள்ளல், மலையமான் திருமுடிக் காரியாவான். ஐங்குநூறு என்னும் நூலில் நெய்தல் திணையைப் பற்றிய நூறு பாடல்களையும், அகத்தில் ஐந்தும், நற்றிணையில் பத்தும், குறுந்தொகையில் பதினொன்றும் ஆக 120 பாடல்களைப் பாடியுள்ளார்.

அரங்கநாத முதலியார் = இவர் பூண்டி என்னும் ஊரினர். எம்.ஏ. பட்டமும், இராவ்பகதூர் பட்டமும் பெற்றவர். கணித நூற் புலமையுடையவர். சென்னை அரசியலார் கல்லூரியில் பேராசிரியராக இருந்தவர். தமிழில் கச்சிக் கலம்பகம் என்னும் நூலைப் பாடியவர். ஒரு முறை ஜட்ஜ் முத்துசாமி ஐயர் தம் வளைதடி தொங்கிய கையை எடுத்து “அடியேன்” ' என்று இவருக்கு வணக்கம் செலுத்தியபோது, திரு.முதலியார் வேடிக்கையாக, “அப்படியானால் உம் கையில் தடியேன்?” என்று கேட்டு அப்போது இருந்தவரை நகைக்கும் வண்ணம் செய்தவர். பல மாணவர்கட்கு உபகாரச் சம்பளம் ஈந்தவர். காலம் கி.பி. 19-ஆம் நூற்றாண்டு.

அரசகேசரி = இவர் பரராசசேகரர் மருகர். வடமொழி தென்மொழிகளை நன்கு பயின்றவர். இரகுவம்ஸம் என்னும் நூலை எழுதியவர். யாழ்ப்பாணவாசி. ஆழ்வார் திருநகரி அட்டாவதானம் இராமானுசக் கவிராயர் இவரது ஆசிரியர். காலம், கி. பி. 17-ஆம் நூற்றாண்டு.

அரசஞ்சண்முகனார் = இவர் சோழவந்தான் என்னும் ஊரில் வாழ்ந்தவர். இலக்கண இலக்கிய புலமை மிகுந்தவர். செய்யுள் இயற்றுவதில் வல்லவர். எளிய வாழ்க்கையர். ஆடம்பரத்தை வெறுத்தவர். ‘சாவாமருந்து’ என்னும் தொடருக்குப் பரிமேலழகர் சாவாமைக்குக் காரணமாகிய மருந்து என்று கூறிய உரையை மறுத்து, “மருந்து என்