பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/560

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

556

அரதத்தாசாரியார் 556 அருணகிரிநாதர்


றாலே சாகாமைக்குரிய பொருள் தொனித்தலின், சாவா என்ற சொல்லை மருந்து என்ற சொல்லுக்கு அடையாகக் கொள்ளக்கூடாது என்று பொருள் தொனித்தலின், சாவா என்ற சொல்லை மருந்து என்னும் சொல்லுக்கு அடையாகக் கொள்ளக்கூடாது என்று கூறிச் சாவா என்னும் சொல்லைச் சாவாம், என்று முற்றுப்புள்ளி தந்து முடித்துக் காட்டிப் பொருள் கூறும் ஆற்றல் வாய்ந்தவர். இவரது புலமையை இவர் எழுதியுள்ளா முருகக் கடவுள் வெண்பா, இன்னிசை இருநூறு , மதுரைச் சிலேடை வெண்பா முதலான செய்யுள் நூற்களின் மூலமும், ஆராய்ச்சித் திறனையும் நுண்ணறிவு வன்மையயும் தொல்காப்பியப்பாயிரம் சண்முக விருத்தி ஆகுபெயர், அன்மொழித் தொகை என்பன போன்ற உரைநடை நூல்களாலும் நன்கு அறியலாம். காலம் 19-ஆம் நூற்றாண்டு.

அரதத்தாசாரியார் = இவர் வைணவ பிராமணர் குடியினர். பின்னர் சைவ சமயம் புகுந்தவர். காஞ்சிபுரவாசி. பல நூல்களைச் செய்தவர். அவற்றுள் சில அரிஹரதாரதம்மியம், சைவாகமபூஷணம், விபூதி உருத்திராக்க பஞ்சகம், தெய்வம் சிவமே என்பன நிலைநாட்டவல்ல சுலோகம் ஐந்து முதலியன. காலம் சிவஞான முனிவர்க்கு முந்தியது.

அரிசில் கிழார் = சங்க காலத்தவர். வேளாளர். பதிற்றுபபத்து நூலில் எட்டாம் பத்து இவரால் பாடப்பட்டது. அப்பாட்டுடைத்தலைவர் பெருஞ்சேரல் இரும்பொறை. இம் மன்னன் இவருக்கு 9000 பொற்காசு பரிசில் நல்கினான். பெருஞ்சேரல் இரும்பொறை தகடூரை முற்றுகையிட்டு அதிகமானைக் கொன்றதைக் குறிக்கும் நூலாகிய தகடூர் யாத்திரை இவரால் பாடப்பட்டது. இந்நூலில் பொன்முடியார் பாடல்களும் உண்டு. அரிசில் கிழாரால் புறத்தில் எட்டும், குறுந்தொகையில் ஒன்றும், பதிற்றுப்பத்தில் எட்டாம் பத்தும், திருவள்ளுவ மாலையில் ஒன்றும் பாடப்பட்டுள்ளன.

அருணகிரிநாதர் = திருவண்ணாமலையில் பிறந்தவர்.