பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/561

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அருணந்தி சிவாசாரியார்

557

அருண்மொழித் தேவர்


முருக பக்தர். இவர் தேவதாசி மரபினர் எனக் கூறப்படுகின்றனர். இவர் பாடிய நூற்கள் திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, கந்தர் அந்தாதி, திருவகுப்புக்கள், மயில் விருத்தம், வேல் விருத்தம் முதலியன. இவர் பிரபுடதேவன் காலத்தவர். வில்லிபுத்தூராரிடமும், சம்பந்தாண்டானிடமும் வாதுசெய்து வென்றவர். கிளிவடிவாக இருந்து கொண்டு இன்னமும் முருகன் புகழைப் பாடுகின்றார் என்றும் கூறுவர். இவர் கி.பி.15-ஆம் நூற்றாண்டினர்.

அருணந்தி சிவாசாரியார் = இவர் அந்தணர். திருத்துறைப்பூண்டியில் பிறந்தவர். ஆகமங்களை ஐயம் திரிபறப் பயின்றவர். இதனால் சகலாகம பண்டிதர் என்ற பெயரையும் பெற்றவர். இவரது ஞானாசிரியர் மெய்கண்ட தேவர். தம் ஆசிரியர் எழுதிய சிவஞான போதம் என்னும் நூலின் விளக்கமாகவே சிவஞான சித்தியர் என்னும் நூலைப் பாடியவர். இவர் பிற மதங்களைத் தக்க காரணம் காட்டிச் சைவசித்தாந்தத்தின் சிறப்பை உணர்த்தும் திறன் மிகமிகப் போற்றற்குரியது. இவர் இயற்றிய நூற்கள் சிவஞான சித்தியார், இருபா இருபஃது. காலம் கி.பி.13-ஆம் நூற்றாண்டு.

அருணாசல கவிராயர் = வேளாளர். இவரது பெற்றோர் நல்லதம்பிப் பிள்ளை, வள்ளியம்மையார். தருமை ஆதீன அம்பலவாண தேசிகரிடம் தமிழ் பயின்றவர். இவர் இயற்றிய நூற்கள் சீகாழித் தலபுராணம், சீகாழிக்கோவை, பர்வதவர்த்தனியம்மை பிள்ளைத்தமிழ், இராமாயண கிர்த்தனை, இராம நாடகம், அனுமார் பிள்ளைத்தமிழ், அசோமுகி நாடகம் முதலியன. கி. பி.18 ஆம் நூற்றாண்டினர்.

அருண்மொழித் தேவர் = சென்னைக்கு அடுத்த குற்றத்தூரினர். சைவ வேளாளர். சேக்கிழார் என்ற பெயரை உடையவரும் இவரே. அனபாயச் சோழனிடம் அமைச்சராக இருந்தவர். பெரியபுராணத்தை இயற்றியவர். தொண்டர் சிர் பரவுவார் என்ற பெயரையும் பெற்