பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/562

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அவிநயனார்

558

அவ்வையார்


றவர். இவருக்குப் பாலறாவாயர் என்ற இளவலும் உண்டு. சிதம்பரத்தில் முத்தி பெற்றவர். கி.பி.12-ஆம் நூற்றண்டினர். பெரும் புலமையுடையவர். இவரது ஏனைய சிறப்புக்களைச் சேக்கிழார் என்ற இடத்தும் காண்க.

அவிநாயனார் = இவர் இலக்கண நூல் ஒன்றைச் செய்தவர். இவரது நூல் உரையாசிரியர்களால் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளது. இவரால் செய்யப்பட்டது அவிநயம் என்பது. பன்னிரு பாட்டியல் என்னும் நூலிலும் சில சூத்திரங்கள் உள்ளன. இவர் தொல்காப்பியர் காலத்தவரா அன்றிப் பிற்பட்டவரா என்பது பற்றி இன்னமும் அறிஞரிடையே ஐயத்திற்கு இடனாகவே இருக்கிறது. பழங்காலத்தவரானால் அகத்திய மாணவர்களுள் இவரும் ஒருவர்.

அவ்வையார் = இப்பெயர் கொண்டவர் பலர் ஆவர். சங்க காலத்தில் ஒர் ஔவையார். சுந்தர மூர்த்தி சுவாமிகள் காலத்தில் ஒர் ஒளவையார் இருந்திருக்க வேண்டும் என்பது தெரிகிறது. ஆனால், சங்க காலத்து அதிகமான் எனனும் வள்ளல் கொடுத்த நெல்லிக் கனியை உண்டு பல்லாண்டுகள் வாழ்ந்தவர் என்று கருதினால் ஒரே ஒளவையார் தாம் இருந்தனர் என்று யூகிக்கலாம். ஔவையார் என்பது பாட்டியார் என்ற பொருள் தருதலின், இவரது முதுமையை உணரலாம். இந்த அம்மையார் இளைஞர்கட்கும் முதியர்கட்கும் உகந்த பல டாடல்களைப் பாடியவர். சைவ நெறியினர். இவர் பல வள்ளல்களைப் பாடியவர். கூழுக்குப் பாடியவர் ஒளவையார் என்பதால் இவ்வம்மையாரது பண்பாடு நன்கு புலனாகும். இவர் பாணர் குடியினரால் எடுத்து வளர்க்கப்பட்டதாகக் கூறுவர். ஆதி, பகவன் என்ற இருவர்க்கும் பிறந்த எழுவருள் ஒருவர் இவர் என்ற வரலாறும் உண்டு. இவரால் பாடப்பட்ட பாடல்கள் பல. அகத்தில் ஐந்து, குறுந்தொகையில் பதினைந்து, நற்றிணையில் ஏழு, புறத்தில்