பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/564

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆசிரியர் நல்லந்துவனார் 560 ஆதிமந்தி


 களையும் பாடியவர். இதற்குச் சான்று இவருக்கு முன்னுள்ள அறிவுடை என்னும் சொல்லே அறிவித்து விடும். புலவர்கள் கூறும் இனிய மொழிகளைக் கேட்டு அவர்களின் குறைகளைப் போக்கும் குணமுடையவர். இவரது பாடல்கள் அகத்தில் ஒன்று, புறத்தில் ஒன்று, நற்றிணையில் ஒன்று, குறுந்தொகையில் ஒன்று உள்ளன.

ஆசிரியர் நல்லந்துவனார் = சங்க காலத்தவர். பரிபாடல் என்னும் நூலில் முருகப் பெருமானார்க்கு ஒன்றும், வையை ஆற்றிற்கு மூன்றும் ஆக நான்கு பாடல்களை இயற்றியவர். நெய்தற் கலியைப் பாடியவரும் இவரே. இவரே கலித்தொகை நூலைத் தொகுத்து அமைத்தவர். திருவள்ளுவ மாலையிலும் ஒரு பாடல் காணப்படுகிறது. இவைகளை அன்றி அகத்தில் ஒன்று, கலித்தொகைக் கடவுள் வாழ்த்து, நற்றிணையில் ஒன்று இவரால் பாடப்பட்டவை.

ஆண்டாளம்மையார் = இவர் பெரியாழ்வாரின் வளர்ப்புத் திருமகளார். துளசிப் பாத்தியில் அவருக்குக் கிடைத்தவர். பெருமாளுக்கெனத் தொடுக்கப்பட்ட மாலையைத் தாம் முன்னர் அணிந்து அழகு பார்த்தவர். இதனால் சூடிக் கொடுத்த நாச்சியார் என்ற பெயரையும் உடையவர். ஶ்ரீவில்லிபுத்துாரில் வாழ்ந்தவர். திருவரங்கப் பெருமாள் இவரை ஏற்று மணந்து கொண்டனர்.இவர் பாடிய நூற்கள் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்பன. கி.பி. 9 ஆம் நூற்றாண்டு.

ஆண்டிப்புலவர் = இவர் ஆசிரியநிகண்டு செய்தவர். செஞ்சிக்கு அருகில் உள்ள ஊற்றங்கால் என்னும் ஊரினர். காலம் 17ஆம் நூற்றாண்டு.

ஆதிமந்தி = சங்க காலத்தவர். பெண்பால் புலவர். சோழன் கரிகால்வளவன் மகள். ஒருசமயம் கரிகாற் சோழன் காவிரியாற்றில் புதுப்புனல் வருங்கால் ஒரு விழா கொண்டாடினார். அதுபோது ஆதிமந்தியும் அவர் கணவனான ஆட்ட நந்தியும் காவிரியில் நீராடி விளை