பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/567

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இம்மென் கீரனார்

563

இராகவ ஐயங்கார்.ரா


  
நூற்களையும் பாடியுள்ளதாகத் தெரிகிறது. இப்பெயர் கொண்ட சித்தர் ஒருவர் இருந்திருக்கிறார். அவர் கொங்கண சித்தர் மாணவர். கி.பி. 15 ஆம் நூற்றாண்டினர்.

இம்மென் கீரனார் = சங்க காலத்தவர். இம் என்ற சொல்லை அமைத்துப் பாடிய காரணத்தால் இப்பெயர் பெற்றவர். அகத்தில் ஒருபாடல் உள்ளது.
 
இரசை வடமலையப்பப் பிள்ளை = சோழநாட்டைச் சார்ந்த இரசை என்னும் ஊரினர். கார்காத்த வேளாளர். திருமலை நாயகர் காலத்தில் பாண்டி நாட்டிற்கு அரசப்பிரதியாக இருந்தவர். இவர் மச்ச புராணம், நீடூர்த் தலபுராணம், நானூற்றுக் கோவை, நாற்கவி வண்ணம் முதலான நூற்களைச் செய்தவர்.

இரட்டையர் = இவர்கள் இருபுலவர்கள். இளஞ்சூரியர், முதுசூரியர் எனப்படுபவர். ஒருவர் குருடர்; ஒருவர் நொண்டி. சோழ நாட்டு ஆலந்துறையினர். செங்குந்த மரபினர் . இவர்கள் சேர்ந்தே பாடல்களைப் பாடுவர். இவர்கள் பல தனிப்பாடல்களையும், திருவாமாத்தூர்க் கலம்பகம், ஏகம்பரநாதர் உலா, தில்லைக் கலம்பகம் முதலியன முதலானவற்றையும், வக்கபாகை ஆட்கொண்டானால் ஆதரவு தரப்பட்டவர்கள். அவன் மீது பாடல்களையும் பாடியுள்ளனர். காலம் கி.பி.15ஆம் நூற்றாண்டு.

இரணிய முற்றத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் = இவர் கடைச்சங்க காலத்தவர். பத்துப்பாட்டில் மலைபடுகடாம் பாடிய ஆசிரியர்.

இரத்தினவேலு முதலியார் = ஈக்காடு எனும் ஊரினர். பின் சிறப்புப் பெயர் அகராதி ஆசிரியர். திருவிளையாடற்புராணம், காசிகாண்டம், வினாயக புராண நூற்களுக்கு உரையும் எழுதியவர். காலம் கி.பி. 20 ஆம் நூற்றாண்டு.

இரத்தினக் கவிராயர் = இவர் இரசை வடமலையப்பப் பிள்ளை மீது புலவர் ஆற்றுப்படை என்னும் நூலைப் பாடியவர். திருப்பேரைத் திருமணிமாலையும் இவரால் செய்யப்பட்டது. காலம் கி.பி. 17ஆம் நூற்றாண்டு.

இராகவஐயங்கார்.ரா = இவர் புதுக்கோட்டையினர்.