பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/568

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இராசகோபாலப் பிள்ளை

564

இராமலிங்க சுவாமிகள்


மதுரைச் செந்தமிழ்ப் பத்திரிகையின் பதிப்பாசிரியர். இவர் வஞ்சி மாநகரம், சேதுநாடும் தமிழும், நல்லிசைப் புலமை மெல்லியலார், தமிழ் வரலாறு, பாரிகாதை, தொழிற்சிறப்பு முதலான நூற்களை எழுதியவர். காலம் கி. பி. 20 ஆம் நூற்றாண்டு.

இராசகோபாலப் பிள்ளை = சிறந்த இலக்கணப்புலவர்; உரையாசிரியர். நாலடியார், நளவெண்பா, திருவாய்மொழி முதலான நூற்களுக்கு உரை எழுதியவர். வைணவர். சென்னை மாகாண அரசினர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்தவர். காலம் கி.பி.20 ஆம் நூற்றாண்டு.

இராசப்பக்கவிராயர் = இவரே திரிகூடராசப்பக் கவிராயர் எனப்படுபவர். இவர் குற்றால சம்பந்தமாகப் பல நூல்களை இயற்றியுள்ளார். குற்றாலத் தலபுராணம், குற்றால மாலை, குற்றால உலா, குற்றாலக் கோவை, குற்றாலப் பிள்ளைத்தமிழ் முதலியன இவர் பாடிய நூற்கள். இவர் செய்த குற்றாலக் குறவஞ்சி நாடகத்தைக் கேட்ட முத்து விசய சொக்கலிங்க நாயக்கர் இவருக்குப் பூமிதானம் செய்தார். அது குறவஞ்சி மேடு என்று இப்பொழுதும் குற்றலத்தே வழங்கப்பட்டுவருகிறது. இவரது காலம் கி.பி.18ஆம் நூற்றாண்டு.

இராமபாரதி = இவர் சிறந்த சைவர். ஆத்திசூடி நீதி வாக்கியங்களை அமைத்துத் தனித்தனியே வெண்பாவைப் பாடி, அதில் ஒவ்வொரு கதைகளையும் சேர்த்து ஆத்திசூடி வெண்பா என்னும் நூலைப்பாடியவர். காலம் கி.பி.19 ஆம் நூற்றாண்டு.

இராமலிங்க சுவாமிகள் = தென்னாற்காடு மருதூரில் பிறந்தவர். கருணீகக் குலத்தினர். இவர் செய்த நூலே திருவருட்பா என்பது. பல வசன நூல்களையும் இயற்றியவர். அவற்றுள் தலைசிறந்தவை மனுமுறைகண்ட வாசகம், சீவ காருண்ய ஒழுக்கம் என்பன. வேதாந்தம், சித்தாந்தம், வடமொழி, தென்மொழி ஆகிய இவற்றில் நல்ல புலமையும் அனுபவமும் பெற்றவர். சித்துப் பல செய்தவர். வடலூரில் ஒரு கோயில் கட்டி வாழ்ந்