பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/569

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இராமானுச கவிராயர்

565

இளங்கோவடிகள்


தவர். காலம் கி. பி. 19 ஆம் நூற்றாண்டு.

இராமானுச கவிராயர் = இவர் இராமநாதபுரத்தினர். பின்னர்ச் சென்னையில் வாழ்வை நடத்தியவர். வைணவ சமயத்தவர். திருவாவடுதுறைச் சோமசுந்தர தேசிகரையடைந்து அவரிடம் இலக்கண இலக்கியங்களைப் பயின்றவர். திருக்குறள், ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நன்னூல் இவற்றிற்கு உரை எழுதியவர். பார்த்தசாரதி மாலை, வரதாராசப் பெருமாள் பதிற்றுப் பத்தந்தாதி முதலிய நூல்களைப் பாடியவர். காலம் கி.பி.19 ஆம் நூற்றாண்டு.

இரும்பிடர்த்தலையார் = கடைச்சங்க காலத்தவர். இவர் பாடிய பாடல் புறநானூற்றில் ஒன்று உளது. இவர் கரிகாற்சோழன் மாமனார். இவர் யானையினை வர்ணிக்கையில் இருப்பிடர்த்தலை என வர்ணித்துப் பாடியதால் இப்பெயரினைப் பெற்றார்.

இரேவண சித்தர் = இவர் சைவ வேளாளர். பேரளத்தில் பிறந்தவர். சிதம்பரத்தில் சில காலம் வாழ்ந்தவர். பின்னர் சென்னைக் கோடம்பாக்கத்தில் வாழ்ந்தவர். அகராதி நிகண்டு என்னும் நூலை இயற்றியவர். இவர் பட்டிசுரப் புராணம், திருவலஞ்சுழிப் புராணம், திருமேற்றளிப் புராணங்களையும் பாடியவர். காலம் கி.பி.16ஆம் நூற்றாண்டு.

இலக்கணம் சிதம்பரநாத முனிவர் = இவர் சிவஞான முனிவர் மாணவர்களில் ஒருவர். திருப்பாதிரிப்புலியூர்ப் புராணம் பாடியவர். காலம் கி.பி.18ஆம் நூற்றாண்டு.

இலாசரஸ் = இவரே ரெவரண்டு லாசரஸ் என்பவர். தமிழ் மொழியினை நன்கு பயின்று ஆராய்ச்சி அறிவு பெற்றவர். நன்னூல், திருக்குறள் முதலியவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். ஆராய்ச்சிக் கட்டுரைகள் பல எழுதியவர். காலம் 20 ஆம் நூற்றாண்டு.

இளங்கோவடிகள் = சங்க காலத்தவர். இளமையில் துறவு பூண்டவர். சேரன் செங்குட்டுவன் இளவல். சைவர்; சைனர் என்னும் கூறுவர். முத்தமிழையும் நன்கு பயின்ற