பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/570

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இளம்பூரணர்

566

உக்கிரப் பெருவழுதி


வர். அதற்குச் சான்றாக இவர் செய்த சிலப்பதிகாரத்தை எடுத்துக் காட்டலாம்.

இளம்பூரணர் = இவர் சிறந்த உரையாசிரியர். அதனால் இவரை உரையாசிரியர் என்றே கூறுவர். தொல்காப்பியத்திற்கு உரை கண்டவர். "உளங்கூர் கேள்வி இளம்பூரணர்." உளங்கூர் உரையாய இளம்பூரணம் என்று இவரையும் இவரது நூலையும் சிறப்பித்துள்ளனர். காலம் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு.

இளம் பெருமானடிகள் = இவர் காலம் தெரிதற்கில்லை என்றாலும் இவர் பாடிய சிவபெருமான் மும்மணிக் கோவை பதினோராம் திருமுறையில் சேர்க்கப்பட்டிருத்தலினால் அதனைப் அப்படிச் சேர்த்த நம்பியாண்டர் நம்பிகளின் காலமாகிய கி.பி. 10 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தென்னலாம்.

இறையனார் = முதற்சங்க காலத்தவர். இவர் செய்த நூலே இறையனார் அகப்பொருள் என்பது. இது களவியல் என்றும் கூறப்படும். இவரால் குறுந்தொகையில் ஒரு பாடலும், திருவள்ளுவ மாலையில் ஒரு பாடலும் பாடிச் சேர்க்கப்பட்டுள்ளன. திருவாலவாய்ச் சொக்கலிங்கப் பெருமானே இவ்வாறு பெயர் கொண்டு புலவராகத் திகழ்ந்தவர் என்பது தொன்று தொட்டு வரும் செய்தியாகும்.

ஈசானதேசிகர் = இவர் திருவாவடுதுறை ஆதினத்தைச் சார்ந்தவர். இவரே சுவாமிநாத தேசிகர் எனப்படுபவர். கல்லாட உரையாசிரியர் மயிலேறும் பெருமான் பிள்ளையிடம் கல்வி கற்றவர். இலக்கணக்கொத்து, தச காரியம், திருச்செந்திற் கலம்பகம் முதலான நூற்களைச் செய்தவர். காலம் கி. பி. 17 ஆம் நூற்றாண்டு.

உக்கிரப்பெருவழுதி = சங்க காலத்தவர். பாண்டிய மரபினர். அரசராய் இருந்தும் கவிபாடிய காவலா் ஆவர். அகநாநூற்றைத் தொகுக்குமாறு செய்தவர் இவரே. இவர் வேங்கைமார்பனது