பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/572

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உருத்திரசன்மர்

568

எல்லப்ப நாவலர்


னும் நூலுக்கு ஆசிரியர். கி. பி. 12 ஆம் நூற்றாண்டினர். இவரது ஆசிரியராகிய திருவியலூர் உய்ய வந்ததேவ நாயனார் பாடிய நூல் திருவுந்தியார்.

உருத்திரசன்மர் = இவரது தந்தையார் உப்பூரிகுடிகிழார். இதனால் இவர் உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திரசன்மர் எனப்படுவர். இவரே அகநாநூற்றைத் தொகுத்துத் தந்தவர். இவர் பிறவியிலேயே ஊமையாகப் பிறந்தவர். இவர் களவியல் என்னும் நூலுக்குப் பலர் உரை கூறியபோது, அவற்றை எல்லாம் பாராட்டாமல், நக்கீரர் கூறிய உரையைக் கேட்டபோது மட்டும் தம் உணர்ச்சியைக் கண்ணீர் வடித்துக் காட்டியவர். கடைச்சங்க காலத்தவர்.

உறையூர் மருத்துவன் தாமோதரனார் = கடைச்சங்க காலத்தவர். உறையூரினர் வைத்தியத் தொழிலில் கைவந்தவர். இவரது பாடல் புறத்தில் மூன்றும், அகத்தில் இரண்டும், திருவள்ளுவமாலையில் ஒன்றும் உள.

ஊன்பொதி பசுங்குடையார் = கடைச்சங்க காலத்தவர். தாம் இளஞ்சேட் சென்னியைப் பாடிப் பெற்ற பரிசிலைத் தமது வறுமைச் சுற்றத்திற்கு வழங்கி மகிழ்ந்தவர். இவரது பாடல் புறத்தில் நான்கு உள.

எருக்காட்டூர்த் தாயம் கண்ணனார் = கடைச்சங்க காலத்தவர். சோழநாட்டு தஞ்சையினைச் சார்ந்த எருக்காட்டூர் வாசி. இவரது பாடலால் ரோமர்களும் கிரேக்கர்களும் சேர்ந்து முசிறித் துறைமுகத்திற்கு வந்து தமது நாட்டுக்கு நம்நாட்டு மிளகைக் கொண்டு சென்றனர் என்பதைக் குறித்துப் பாடியுள்ளார். இவரது பாடல்கள் புறத்தில் ஒன்றும், அகத்தில் மூன்றும், குறுந்தொகையில் ஒன்றும், நற்றிணையில் ஒன்றும் உள.

எல்லப்ப நாவலர் = இவரைச் சைவ எல்லப்ப நாவலர் என்பர். தருமையாதீனத்தைச் சார்ந்தவர். காவிரிப் பூம்பட்டினத்திற்கு