பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/573

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்னையினாப் புலவர்

569

ஒட்டக்கூத்தர்


என்னையினாப்புலவர் 569 ஒட்டக்கூத்தர்

அண்மையதான இராதநல்லூரில் தோன்றியவர். இவர் அருணைக்கலம்பகம், திருவெண்காட்டுப் புராணம், செவ்வந்திப் புராணம், திருச்செங்காட்டங்குடிப் புராணம் பாடியவர். பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் காலத்தவர். இவரது மனைவியாரும் கவி பாடுவதில் வல்லவர். ஐயங்கார் சிவபெருமானைத் தாழ்த்தி விஷ்ணுவை உயர்த்திப் பாடிய பாடல்களுக்கு எதிராக விஷ்ணுவைத் தாழ்த்திச் சிவபெருமானை உயர்த்திப் பாடியவர். காலம் கி. பி,17 ஆம் நூற்றாண்டு.

என்னையினாப் புலவர் = இவர் எழுதிய நூல் முக்கூடற்பள்ளு என்பது. காலம் கி.பி.17 ஆம் நூற்றாண்டு. இவர் இயற்கையைப் பாடுவதில் வல்லவர்.

ஏணிச்சேரி முடமோசியார் = இவர் பிறவியில் முடமாகவே பிறந்தவர். ஏணிச்சேரி என்னும் கிராமத்தவர். இவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்றும் கூறப்படுவர். இவரது பாடல்கள் புறத்தில் ஆறு உள. இவர் அந்துவஞ்சேரல் இரும்பொறையும், முடித்தலைக் கோப்பெரு நற்கிள்ளியும் வாழ்ந்த காலத்துப் புலவர்

ஐயடிகள் காடவர்கோன் = பல்லவ மன்னர் மரபினர். துறவு பூண்ட தூயர். பல தேவாலய யாத்திரை செய்தவர். இதன் பயனாக க்ஷேத்திர வெண்பா என்னும் நூலைச் செய்தவர். கி. பி.9 ஆம் நூற்றாண்டினர்.

ஐயம் பெருமான் பிள்ளை = பாண்டி மண்டல சதக ஆசிரியர்.கி.பி.19 ஆம் நூற்றாண்டினர்.

ஐயனாரிதனார் = இவர் சேர வம்சத்தினர். சைவர். புறப்பொருள் வெண்பாமாலை என்னும் நூலைச் செய்தவர். இவரது காலம் கி. பி. 13 ஆம் நூற்றாண்டு.

ஒட்டக்கூத்தர் = செங்குந்த மரபினர். சைவர். இவர் வயதால் முதிர்ந்தவர். முதற் குலோத்துங்கன் காலத்தவர். அவன்மீது பிள்ளைத்தமிழ், உலா நூல்களைப் பாடியவர். இவை