பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/574

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

{{rh|ஒப்பிலாமணிப்புலவர்|570||கச்சியப்ப முனிவர்


யே அன்றி புதுவை காங்கேயன் மீதும் நாலாயிரக் கோவை நூல் பாடியவர். விக்ரம சோழன் மீதும் இரண்டாம் குலோத்துங்கன் மீதும் உலா பாடியவர். மூன்று உலாக்கள் அடங்கிய நூலே மூவர் உலா எனப்படும். தக்கயாக பரணியும், இராமாயண உத்தரகாண்டமும், ஈட்டி எழுபதும் இவரால் பாடப்பட்டவை. கி.பி. 12ஆம் நூற்றாண்டினர்.தேவியின் அருளைப் பூரணமாகப் பெற்றவர். அதனால் வெட்டுண்ட உடலங்களையும் தலைகளையும் ஒட்டப் பாடிய காரணத்தால் ஒட்டக்கூத்தர் என்னும் பெயரைப் பெற்றவர். இவரை வாணிதாதன் என்றும் கூறுவர்.

ஒப்பிலாமணிப் புலவர் = சிறந்த சைவர். சிவ ரகசியம் என்னும் நூலுக்கு ஆசிரியர். இலக்கண விளக்க வைத்திய நாத தேசிகரிடம் கல்வி பயின்றவர். தஞ்சை சரபோஜி மன்னர் காலத்தவர். கி.பி. 18 ஆம் நூற்றாண்டினர். குமணன் வரலாற்றைப் பாடியவர் ஒருவரும் இப்பெயருடையவர் ஆவர். கி.பி. 19ஆம் நூற்றாண்டினர் என்பது அறிஞர் துணிபு.

கச்சியப்ப சிவாசாரியார் = இவர் காஞ்சிபுர குமர கோட்ட அர்ச்சகருள் ஒருவர். முருகப் பெருமான் அருளைப் பூரணிமாகப் பெற்றவர். இவரது தந்தையார் காளத்தியப்ப சிவாசாரியார். இவர் வடமொழி, தென்மொழிகளையும் ஆகமங்களையும், திருமுறைகளையும் நன்கு பயின்றவர். இவரே கந்த புராணத்தின் ஆசிரியர். காலம் கி.பி. 12ஆம் நூற்றாண்டு.

கச்சியப்ப முனிவர் = இவர் சிவஞான முனிவரின் மாணவர். திருத்தணிகையில் வேளாளர் குலத்தில் உதித்தவர். இவர் பாடிய நூல்கள் பல. விநாயக புராணம், தணிகை புராணம், ஆனந்தருத்திரேசர் வண்டு விடுதூது, திருவானைக்காப் புராணம், பேரூர்ப் புராணம், காஞ்சி புராணத்தின் இரண்டாம் காண்டம், திருத்தணிகைப் பதிற்றுப்பத்து அந்தாதி முதலியன. கி.பி. 18 ஆம் நூற்றாண்டு.