பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/575

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுள் மாமுனிவர்

571

கண்ணஞ்சேந்தனார்



கடவுள் மாமுனிவர் = திருவாதவூர் அடிகள் புராணம் செய்தவர். கச்சியப்ப முனிவரின் காலத்தவர். அவருக்கு நெருங்கிய நண்பரும் ஆவார். கி.பி. 18ஆம் நூற்றாண்டு.

கடிகை முத்துப் புலவர் = இவர் எட்டையபுரம் சமஸ்தானப் புலவர். யமகம், அந்தாதி முதலியவற்றைப் பாடுவதில் வல்லவர். இவர் பல தனிப் பாடல்களையும் நூற்களையும் எழுதியுள்ளார். அவற்றுள் சமுத்திர விலாசம், காமரசமஞ்சரி முதலியன குறிப்பிடத்தக்கன. காலம் 17ஆம் நூற்றாண்டு.

கடியலூர் உருத்திரங் கண்ணனார் = கடைச்சங்க காலத்தவர். பெரும்பாணாற்றுப்படை,பட்டினப்பாலைகளின் ஆசிரியர். இரண்டும் முறையே தொண்டைமான் இளந்திரையன் சிறப்பும், சோழன் கரிகால் பெருவளத்தான் சிறப்பும் கூறுவன.

கணக்காயனார் = இவர் ஆசிரியத் தொழிலை மேற்கொண்டவர். மதுரைவாசி. நக்கீரனார் தந்தையார். இவரது பாடல் குறுந்தொகையில் ஒன்று உளது. காலம் கடைச்சங்க காலம்.

கணிமேதாவியார் = இவர் எழுதிய நூற்கள் ஏலாதி, திணைமாலை நூற்றைம்பது. சோதிடம் வல்லவர். இக்காரணம் பற்றியே கணி என்று அடையுடன் கூறப்பட்டு வருகின்றனர். காலம் கடைச்சங்க காலம்.

கணியன் பூங்குன்றனார் = கடைச்சங்க காலத்தவர். சோதிடம் வல்லவர், புறத்தில் ஒன்றும், நற்றிணையில் ஒன்றும் இவரது பாடல்கள் உள.

கண்டராதித்தர் = இவர் சோழ மரபினர். முதற் பராந்தகன் திருமகனார். சைவத் திருமுறைகளுள் ஒன்பதாம் திருமுறையில் உள்ள திருவிசைப்பா பாடிய ஆசிரியர்களுள் இவரும் ஒருவர். கி.பி. 10 ஆம் நூற்றாண்டினர்.

கண்ணங்கூத்தனார் = கடைசி சங்க காலத்தவர். இவரது தந்தையார் கண்ணன் என்பவர். இவரால் பாடப்பட்ட நூல் கார் நாற்பது என்பது.

கண்ணஞ்சேந்தனார் = கடைச்சங்க காலத்தவர். இவரது தந்தையார் சாத்தந்தை