பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/578

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கருவூர்த்தேவர்

574

கல்லாடர்


கருவூர்த்தேவர் = கொங்கு நாட்டில் கருவூரில் பிறந்தவர். இவர் சிறந்த சித்தர். இவரது பாடல்கள் ஒன்பதாம் திருமுறையில் திருவிசைப்பா என்றும் பகுதியில் உள்ளன. இவரே இராஜராஜேஸ்வரச் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டைக்கு உதவியாய் இருந்தவர். காலம் கி.பி. 11ஆம் நூற்றாண்டு.

கலியாணசுந்தர முதலியார் = இவர் சிறந்த சைவ சித்தாந்தி. சொற்பொழிவு ஆற்றும் திறனும் உரை எழுதும் வன்மையும் உடையவர். இவரே பூவை கலியாணசுந்தரர் எனப்படுவார். பட்டினத்தார் பாடல், தாயுமானவர் பாடல்களுக்குச் சிறந்த உரைகளை எழுதியவர். சித்தாந்த வசன பூஷணம் என்னும் நூலையும் எழுதியுள்ளார். காலம் கி. பி. 20 ஆம் நூற்றாண்டு.

கலியாணசுந்தர முதலியார் = இவரே திரு.வி.க. எனப்படுபவர். இவர் சமய உலகிற்கும் தொழிலாளர் உலகிற்கும் பெரிதும் பாடுபட்டவர். எழுதும் திறனும் பேசும் திறனும் படைத்தவர். பல உரைநடை நூற்களையும், செய்யுள் நூற்களையும் எழுதியவர்.பெரிய ராணத்திற்குச் சிறந்த முறையில் குறிப்புரை எழுதியவர். பெண்ணின் பெருமை, என்கடன் பணிசெய்து கிடப்பதே, வள்ளலார் திருவுள்ளம், முருகன் அல்லது அழகு முதலியன உரைநடை நூற்களில் குறிப்பிடத்தக்கன. முருகன் அருள் வேட்டல், திருமால் அருள் வேட்டல் முதலியன இவரது செய்யுள் பாடும் திறனுக்கு எடுத்துக்காட்டுகள். சைவ சமயத்தவர் ஆயினும் சமரச நோக்கினர். ஏயேசுப்பெருமான் மீதும் பாடல்களைப் பாடியவர். காலம் கி. பி. 20 ஆம் நூற்றண்டு. தம் சுயசரித்திரத்தையும் இவர் எழுதியுள்ளார்.

கல்லாடர் = இவர் மலையாள நாட்டைச் சார்ந்த கல்லாடம் என்னும் ஊரினர் போலும். கடைச்சங்க காலத்தவர். இவரது பாடல்கள் அகத்தில் ஏழும், குறுந்தொகையில் இரண்டும், திருவள்ளுவ மாலையிலும் ஒன்றும் உள்ளன. தொல்காப்பியம் சொல்லதிகாரத்திற்கு உரை கண்ட கல்லாடரும் கல்லாடம் என்னும்