பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/580

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காங்கேயர்

576

கால்டுவெல் துரைமகனார்


லர் என்பது சிலரது துணிபு.

காங்கேயர் = உரிச்சொல் நிகண்டு ஆசிரியர். செங்குந்த மரபினர். தொண்டை மண்டலத்தில் தோன்றியவர். காலம் கி.பி. 16ஆம் நூற்றாண்டு.

காஞ்சி ஞானப்பிரகாசர் _ இவர் காஞ்சிபுரத்தில் உள்ள சைவமடத் தலைவர். கச்சிக் கலம்பகம் இவர் பாடிய நூல். கி.பி. 16ஆம் நூற்றாண்டினர். சிறந்த சைவசித்தாந்தியார்.

காரி இரத்தினக் கவிராயர் = இவரைத் திருமேனி இரத்தினக் கவிராயர் என்றும் கூறுவர். ஆழ்வார் திருநகரியினர். மாறன் அலங்காரம் என்னும் அணியிலக்கண நூலுக்கு உரை எழுதியவர். பரிமேல்அழகர் நுண் பொருள் மாலை என்னும் நூலையும் எழுதியவர். கி.பி. 17 ஆம் நூற்றாண்டு.

காரியாசான் = கடைச்சங்க காலத்தவர். சிறுபஞ்சமூல நூல் ஆசிரியர். சைன சமயத்தவர்.

காரைக்கால் அம்மையார் = இவருக்குப் புனிதவதியார் என்ற பெயரும் உண்டு. காரைக்காற் பதியில் நிதிபதி செட்டியார் திருமகளார். நாகை பரமதத்தனுக்கு வாழ்க்கைப்பட்டவர். இறைவன் திருவருளால் பேய் வடிவினை வேண்டிப் பெற்றவர். திருவாலங்காட்டில் முத்தியடைந்தவர். இவர் பாடியன அற்புதத் திருவந்தாதி, மூத்த திருப்பதிகம், இரட்டைமணிமாலை என்பன. இவை பதினோராம் திருமுறையில் சேர்க்கப் பட்டிருக்கின்றன. காலம் கி.பி.6 நூற்றாண்டு.

கார்த்திகேய முதலியார் = தொண்டை நாட்டு மாகறல் என்னும் ஊரினர். சைவ சமயத்தவர். மொழி நூல் எழுதியவர். தமிழ் விண்ணப்பம் என்னும் நூலும் இவரால் எழுதப்பட்டது. காலம் கி.பி. 20ஆம் நூற்றாண்டு.

கார்மேகக் கவிஞன் = கொங்கு நாட்டின் விஜ மங்கல ஊரினர். கொங்கு மண்டல சதகம் இவரால் இயற்றப்பட்டது. இவரது மரபு இன்னதென அறிதற்கு இல்லை.

கால்டுவெல் துரைமகனார் = இவர் மேனாட்டு பாதிரியார். தென்னாடு வந்து தென்னாட்டு மொழிகளை நன்கு