பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/584

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கூடலூர்கிழார்

580

கோப்பெருஞ் சோழர்


எண்ணெயில் கையையிட்டுத் தம் கைக்கு எந்த வித துன்பமும் ஏற்படாதவாறு காட்டியவர். காலம் 9 ஆம் நூற்றாண்டு.

கூ

கூடலூர்கிழார் = கடைச்சங்க காலத்தவர். இவர் யானைக்கண் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறையின் காலத்தவர். வான நூல் புலமை பெற்றவர். முதுமொழிக் காஞ்சி என்னும் நூலைப் பாடியவர். ஐங்குறுநூறு என்னும் நூலைத் தொகுத்துத் தந்தவர். இவர் பாடினவாகப் புறத்தில் ஒன்றும், குறுந்தொகையில் மூன்றும் ஆக நான்கு பாடல்கள உள.

கொ

கொங்குவேள் = இவரே உதயணன் காதை ஆசிரியர். அது கொங்குவேள் மாக்கதை, பெருங்கதை என்றும் கூறப்படும். இந் நூலாசிரியர் விகடமங்கலம் என்னும் ஊரினர். கொங்கு நாட்டு வேளாள சிற்றரசருள் ஒருவர். காலம் கி.பி. 6 ஆம் நூற்றாண்டு.

கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் = இவர் பல நூல்களைப் பாடியவர். அவற்றை இணைத்துச் சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தத் திரட்டு என்ற பெயரால் ஒரு நூல் வெளிவந்துள்ளது. குறிப்பிடத்தக்க நூற்கள் சரபோசிராசன் குறவஞ்சி, சரபேந்திரன் வைத்திய முறை, கோடிச்சுரக் கோவை, கொட்டையூர்ப் புராணம், பிரகதீஸ்வரர் உலா, குறவஞ்சி என்பன. கி.பி. 19 ஆம் நூற்றாண்டு.

கோ

கோபாலகிருஷ்ன பாரதியார் = இவர் இசைநூற் புலவர். மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை காலத்தவர். நந்தனார் கீர்த்தனை என்னும் நூலையும், சிதம்பரக் கும்மி என்னும் நூலையும் பாடியவர். கி.பி. 19 ஆம் நூற்றாண்டு.

கோப்பெருஞ் சோழர் = சங்க காலத்தவர் சோழ மன்னர் மரபினர். பொத்தியார், பிசிராந்தையார் என்னும் புலவர்கட்கு உயிரனைய நண்பர். இவர் சோழன் குரும்பொறை என்போனால் வெல்லப்பட்டவர். அதன் பொருட்டு வடக்கிருந்து உயிர் விட்டவர். இவரது பாடல்