பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/585

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோவூர் கிழார்

581

சண்முகம் பிள்ளை


கள் குறுந்தொகையில் நான்கும் புறத்தில் மூன்றும் உள.

கோவூர் கிழார் = கடைச்சங்க காலத்தவர். வேளாள மரபினர். இவர் மன்னர்கட்கு அறிவுரை புகட்டுவதில் வல்லவர்.சமாதானப்படுத்தி வைப்பதிலும் சமர்த்தர். இளந்தத்தன் நெடுங்கிள்ளி என்பானால் கொல்லப்படும் தருணம் கொல்லப்படாமல் செய்தவர். மலையமான் மக்கள் கிள்ளி வளவனால் யானைக் காலில் வைத்துக் கொல்லக் கட்டளை இட்டதைத் தடுத்தவர். இவரது பாடல்கள் புறத்தில் பதினைந்தும், நற்றிணையில் ஒன்றும், குறுந்தொகையில் ஒன்றும், திருவள்ளுவ மாலையில் ஒன்றும் உள்ளன.

கோனேரியப்ப நாவலர் = இவர் கந்தபுராணத்தைச் சார்ந்த உபதேச காண்டத்தை இயற்றியவர். இவரைக் கந்த புராண ஆசிரியர் கச்சியப்ப சிவாசாரியாரின் மாணவர் என்பர். அப்படியானால் இவரது காலம் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு. இவரை 18 ஆம் நூற்றாண்டு புலவர் என்றும் கூறுவர்.

சங்க நமச்சிவாயர் = இவர் திருநெல்வேலியில் பிறந்தவர். இலக்கணக் கொத்து எழுதிய சுவாமிநாத தேசிகரிடம் கல்வி பயின்றவர். இவர் போலிகார் மருதப்பதேவன் வேண்டுகோளின்படி நன்நூலுக்கு விருத்தியுரை வரைந்தவர். காலம் கி.பி. 17ஆம் நூற்றாண்டு. இவ் வுரையினைச் சிவஞான முனிவர் திருத்தம் செய்துள்ளார்.

சசிவண்ணர் = இவர் தத்துவராயரிடம் தீட்சை பெற்றவர். விருத்தாசலத்தில் உதித்தவர். இவர் வெண் குஷ்ட நோயால் துன்புற்றவர். இக் காரணம் பற்றியே இப்பெயரால் குறிப்பிடப்பட்டு வந்தார். இவரது பெற்றோர் சாந்தசீலர் விரத சீலை என்பவர். காலம் 15 ஆம் நூற்றாண்டு. சசிவண்ண போதம் என்னும் நூலையியற்றியவர்.

சண்முகம் பிள்ளை = இவர் மயிலை சண்முகம் பிள்ளை என்றும் கூறப்படுவார். மயிலையில் வாழ்ந்தவர். கம்பராமாயணம் பாடம் சொல்லுவதில் வல்லவர்.