பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/586

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சத்திமுற்றப் புலவர்

582

சம்பந்தர்


திருமுல்லைவாயில் புராணம் இவரால் பாடப்பட்டது. காலம் கி.பி.20 ஆம் நூற்றாண்டு.

சத்திமுற்றப் புலவர் = இவர் பிறந்த ஊர் சத்திமுற்றம் என்பது. இது கும்பகோணத்தைச் சார்ந்தது. இவரை ஆதரித்தவர் சோழ நாட்டுக் குடிதாங்கி என்பவன். இவர் பாடிய நாரை விடுதுாது என்னும் ஒரு தனிப்பாடல் இவரது வறுமை நிலையினையும், உவமைகூறும் ஆற்றலையும் புலப்படுத்தும். காலம் கி.பி. 18 ஆம் நூற்றாண்டு.

சபாபதி நாவலர் = ஆறுமுக நாவலர் மாணவர்களுள் ஒருவர். யாழ்ப்பாணத்தைச் சார்ந்தவர். நல்ல பேச்சாளர். எழுத்தாளர். இவர் இயற்றிய நூற்கள் பல. அவற்றுள் குறிப்பிடத்தக்கன ஏசு மத சங்கற்ப நிராகரணம், சிதம்பர சபாநாதர் புராணம், இராமாயண தாற்பரிய சங்கிரகம், சதுர்வேத தாற்பரிய சங்கிரகம், திருச்சிற்றம்பல யமக அந்தாதி, திருவிடைமருதூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி, இலக்கண விளக்கப் பதிப்புரை மறுப்பு, திராவிட பிரகாசிகை என்பன. கி.பி.19ஆம் நூற்றாண்டு.

சம்பந்தசரணாலயர் = இவர் தருமபுர மடத்துப் பண்டார சந்நிதியாவார். கந்த புராணச் சுருக்கம் பாடியவர். மைசூர் மன்னன் இவரைக் கண்டபோது, இவர் கருநிறமுடையவராக இருந்த காரணத்தால் 'வாரும் அண்டங் காக்கையாரே' என்று அழைத்தபோது,உடனே இவர், "அண்டங்காக்கை யார் என்பது உமக்குத் தகுமே அன்றி எம் போன்ற துறவிக்கு எங்ஙனம் பொருந்தும்?' என்று கூறிய அறிஞர். அண்டங்காக்கை என்பது உலகைக்காத்தல் என்ற பொருள் தருதலின் இங்ஙனம் கூறினர். காலம் கி.பி. 16 ஆம் நூற்றாண்டு.

சம்பந்தர் = இவரே திருஞான சம்பந்தர் எனப்படுபவர். ஆளுடைய பிள்ளையார் என்பதும் இவரது பெயர். மற்றும் பல பெயர்கள் இவருக்கு உண்டு. சீர்காழியில் கௌணியர் கோத்திரத்தில் அந்தணர் மரபில் சிவபாத இருதயருக்கும் பகவதி என்னும் அம்மை