பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/587

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

583


சயங்கொண்டார் 583 சரவணப் பெருமாள்

யாருக்கும் பிள்ளையாகப் பிறந்தவர். மூவாண்டில் ஞானப்பால் உண்டு பாடல்களைப் பாடியவர். சிவபெருமான் திருவருளால் பல அற்புதங்களைச் செய்தவர். பாம்பு கடித்தவனை எழுப்பினார். பாண்டியன் கூனை நிமிர்த்தினார். சுரத்தைப் போக்கினார். எலும்பைப் பெண்ணாக்கினார். சமணர்களை வாதில் வென்றார். தம் திருப்பதிகம், ஆற்றில் அடித்துப் போகா வண்ணமும், நெருப்பில் வேகா வண்ணமும் செய்தவர். இவர் பாடிய பாடல்கள் தேவாரத்தில் உள்ளன. இவரது பாடல்கள் திருக்கடைக்காப்பு என்றும் கூறப்படும். சைவத் திருமுறைகள் பன்னிரண்டனுள், முதல் மூன்று திருமுறைகளாக உள்ளன. இவர் பல்லாயிரக் கணக்கான பதிகங்களைப் பாடியும், இப்போது உள்ளவை 384 பதிகங்களே ஆகும். இவர் காலத்தில் அப்பர், சிறுத்தொண்டர் முதலியோர் திகழ்ந்தனர். காலம் கி.பி. 7ஆம் நூற்றாண்டு.

சயங்கொண்டார் = இவர் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தவர். தீபங்குடியில் தோன்றியவர். கலிங் த்துப் பரணியைப் பாடியவர். பாணி பாடுதலில் வல்லவர் என்பதை உணர்த்த பரணிக்கோர் ஜயங்கொண்டார்’' எனச் சிறப்பிக்கப்பட்டவர். சைவ சமயத்தவர். இசையாயிரம் என்னும் நூலையும் இயற்றியதாகக் கூறுவர். காலம் கி.பி. 11ஆம் நூற்றாண்டு.

சரவணப்பெருமாள் ஐயர் = இவர் வீரசைவ மரபினர். திருத்தணிகையில் பிறந்தவர். இவரது தந்தையார் கந்தப்பையர் என்பவர். இவர் சிறந்த உரையாசிரியர். நைடதம், பிரபுலிங்க லீலை ஆகிய நூற்களில் சில பகுதிகளுக்கு உரை கண்டவர். நாலடியார் திருவாசகம் முதலிய நூல்களைப் பதிப்பித்தவர். இயற்றமிழ்ச் சுருக்கம், அணியியல் விளக்கம், களத்தூர்ப் புராணம் இவரால் இயற்றப்பட்டவை. காலம் கி. பி. 19ஆம் நூற்றாண்டு.

பெருமாள் கவிராயர் = முத்து ராமலிங்க சேதுபதியின் அவைக்களப் புலவர். பணவிடு தூதின் ஆசிரியர் இவர்