பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/589

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிதம்பர சுவாமிகள்

585

சிதம்பரம் பிள்ளை


சிதம்பர சுவாமிகள் 585 சிதம்பரம் பிள்ளை


பண்பில் தலை சிறந்தவர். எளிய இனிய உரைநடை எழுதும் ஆற்றல் படைத்தவர். தமது ஆசிரியர் திரு பிள்ளை அவர்களிடத்தில் அளவுகடந்த அன்பும் பக்தியும் உடையவர்.அவர் பெயரைத் தம் வாயாலும் கூறாது பிள்ளை அவர்கள் என்றே கூறிவந்தவர். வித்துவான் தியாகராய செட்டியாரிடத்தும் அன்புடையவர். அவ்வன்புக்கு அறிகுறியாகத் தம் இல்லத்திற்குத் தியாகராய விலாஸ் என்ற பெயரையே அமைத்தவர். மீனாட்சிசுந்தரம் பிள்ளை சரித்திரம், சங்ககாலத் தமிழும் பிற்காலத் தமிழும், என் வாழ்க்கை வரலாறு, கண்டதும் கேட்டதும் முதலான உரைநடை நூற்களையும் எழுதியவர். காலம் கி.பி. 20ஆம் நூற்றாண்டு.

சி

சிதம்பர சுவாமிகள் = சிறந்த இலக்கணப் புலவர். இவர் மதுரையிலிருந்த சாந்தலிங்க சுவமிகளிடம் ஞான தீட்சை பெற்றுத் துறவியானவர். திருப்போருரில் தங்கி மடம் ஒன்றைத் தாபித்தவர். இவர் பாடிய

74 நூற்கள் திருப்போரூர் சந்நிதி முறை, திருப்போ ரூர் முருகன் பிள்ளைத்தமிழ். உபதேசக் கட்டளை முதலியன. சாந்தலிங்க சுவாமிகள் எழுதிய வைராக்கிய தீபம், கொலை மறுத்தல், வைராக்கிய சதகம், முதலான நூல்களுக்கு உரைகண்டவர். திருப்போரூர் முருகன் கோயிலைக் கண்காணித்து வந்தவர். பல சித்துக்களிலும் வல்லவர். இவரது உரையால் தான் சம்பந்தர் பாடல்கள் திருக்கடைக்காப்பு என்றும், திருநாவுக்கரசர் பாடல்கள் தேவாரம் என்றும், சுந்தரர் பாடல்கள் திருப்பாட்டு என்றும் அறிய வருகின்றன. காலம் கி. பி. 18 ஆம் நூற்றாண்டு.

சிதம்பரம் பிள்ளை = இவர் சிறந்த நாட்டுப்பற்றுடையவர், திருநெல்வேலியைச் சாா்ந்தவர். அதன்பொருட்டுப் பல இன்னல்களுக்கு ஆளானவா். சிறையிலிருந்து துன்புற்றவா். கப்பலோட்டிய தமிழர் என்ற சிறப்புப் பெற்றவர், இவர் இன்னிலை விருத்தியுரை, அகமே புறம், மெய்யறிவு என்ற நூல்களைச்