பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/593

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தரர்

589

சுப்பிரமணிய பாரதியார்


சுந்தரர் = இவர் சைவ சமயாசிரியர் நால்வருள் ஒருவர். இவர் பாடிய பாடல்கள் தேவாரத்தில் உள்ளன. அப் பாடல்களைத் திருப்பாடல்கள் என்றும் கூறுவர். திருநாவலூரில் ஆதி சைவ பிராமண மரபில் சடையனார், இசைஞானியர் என்பாருக்குத் தவப்புதல்வராய்ப் பிறந்தவர். இவரது திருமணத்தில் சிவபெருமானே வந்து, இவர் திருமணத்தை நடத்திக் கொள்ளாமல் படி தடுத்து ஆட்கொள்ளப் பெற்றவர். பின்னர்ப் பல தலங்களுக்கு யாத்திரை செய்தவர். அவ் யாத்திரையில் பரவையார், சங்கிலியார் என்ற மாதர்களைச் சிவனார் அருளால் மணந்தவர். பல அரிய பெரிய அற்புதங்களைச் சிவபெருமான் திருவருளால் நடத்திக் காட்டியவர். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை முதலையுண்ட பாலனை அழைத்தல், செங்கல்லைப் பொன் கல்லாகச் செய்தல், ஆற்றில் இட்ட பொருளைக் குளத்தில் எடுத்தல் முதலியன. இவர் பாடிய தேவாரப் பதிகங்கள் 37000. ஆனால், இன்று உள்ளவை 100 பதிகங்களே. காலம் கி.பி. 9 ஆம் நூற்றாண்டு. இவரது பாடல்கள் பலவகையான நயங்களைக் கொண்டு விளங்குவதால், "நயத்துக்குச் சுந்தரனார்" என்று இவரைச் சிறப்பித்துப் பேசுவர். கல்வியின் பொருட்டு இவரது நட்பைச் சிவபெருமான் பெற்றார் என்றால், இவரது பெருமையைக் கூறவும் வேண்டுமா? அதன் பொருட்டுத் தம்பிரான் தோழர் என்றும் பெயரையும் பெற்றவர்.

சுப்பிரமணிய பாரதியார் = இராமநாதபுர எட்டயபுரத்தில் பிறந்தவர். தேசியக் கவிஞர். பின்னிகழ்வதை முன்னறிந்து பாடும் ஆற்றல் மிக்கவர். வடமொழி தென்மொழி அறிந்தவர். தமிழ்மொழியினிடத்து அளவுகடந்த பற்றுடையவர். இவரது பாடல்கள் உறங்குபவனையும் தட்டி எழுப்பி உணர்ச்சியூட்ட வல்லன. சென்னைத் திருவல்லிக்கேணியிலும் புதுவையிலும் விழைந்தவர். பாஞ்சாலி சபதம், பாப்பாப் பாட்டு, கண்ணன் பாட்டு