பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/594

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுப்பிரமணியப் பிள்ளை

590

சூரியநாராயண சாஸ்திரி


முதலான பாடல்களைப் பாடியவர். பிற நாட்டுக் கலைகளைத் தமிழ் மொழியில் பெயர்த்து எழுத வேண்டுமென்ற பேரவா படைத்தவர். கி. பி. 20 ஆம் நூற்றாண்டு.

சுப்பிரமணியப் பிள்ளை = திருநெல்வேலியினர். இவர் எம்.எல். பிள்ளை என்று கூறப்பெறும் சிறப்புடையவர். சட்டம் பயின்று சட்டக் கல்லூரித் தலைவராக மிளிர்ந்தவர். தமிழ் நூல்களையும் சைவசித்தாந்த நுாற்களையும் நன்கு பயின்றவர். பல உரை நடை நூற்களை எழுதியவர். அவை யாவும் ஆராய்ச்சி நூற்களாகவே இருக்கும். தமிழ் இலக்கிய வரலாறு, மெய்கண்ட நூற்கள் உரைநடை, மெய்கண்டாரும் சிவஞான போதமும், இந்து சமயங்களின் சுருக்க வரலாறு, மொழிநூற் கொள்கையும் தமிழ் மொழி அமைப்பும், பழந்தமிழர் நாகரிகம், வான நூல் முதலியன இவர் எழுதிய நூாற்கள். கி. பி. 20ஆம் நூற்றாண்டு.

சுவாமிநாத தேசிகர் = சைவ வேளாள மரபினர். இவரது வடமொழியாசிரியர் கனகசபாபதி சிவாசாரியார். தமிழ் ஆசிரியர் மயிலேறும் பெருமாள் பிள்ளை. திருவாவடுதுறை அம்பலவாண தேசிகரிடம், ஞானோபதேசம் பெற்று ஈசான தேசிகர் என்ற தீட்சா நாமம் பூண்டவர். இலக்கணக் கொத்துத் தசகாரியம் முதலான நூற்களை எழுதியவர்.கி.பி.17ஆம் நூற்றாண்டு.

சூ

சூரியநாராயண சாஸ்திரியார் = இவர் பரிதிமாற் கலைஞர் என்றும் கூறப்படுவார். தமிழ் மொழிப் பற்றில் தலை சிறந்தவர். மதுரை சபாபதி முதலியாரின் மாணவர். கிறிஸ்தவக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்தவர். உயர்ந்த நடையில் செய்யுளையும் உரைநடைகளையும் எழுதக்கூடியவர். இவர் பி.ஏ. பட்டம் பெற்றவர். வரலாற்றுப் புலமையுடையவர். தமிழ் வரலாறு, மதிவாணன், பாவலர் விருந்து, கலாவதி, நாடக இயல், ரூபாவதி முதலான நூற்களை எழுதியவர். இவர் வாழ்ந்த ஆண்டுகளில் தமிழ் மொழிக்குச் செய்த