பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/595

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

செல்வகேசவராய

591

சேந்தனார்


தொண்டு மிக மிகப் பாராட்டற்குரியது. கி.பி.19ஆம் நூற்றாண்டு. இவர் "வட மொழிக்கு வாய் இல்லை என்று எழுதிய அத்துணைத் தமிழ்ப் பற்றுடையவர் என்றால் இவர் தமிழ் மொழியினிடத்துக் கொண்டிருந்த அன்பைக் கூறவும் வேண்டுமோ?"

செ

செல்வகேசவராய முதலியார் = இவர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்தவர். எம்.ஏ. பட்டம் பெற்றவர். வேளாள மதத்தினர். கம்பன், திருவள்ளுவர், தமிழ், கண்ணகி முதலான உரைநடை நூல்களை எழுதியவர். கி.பி.20ஆம் நூற்றாண்டு. இவர் தமது திருக்குமாரர்களுக்கு நச்சினார்க்கினியன், பரிமேலழகர், இளம்பூரணன் என்ற பெயரைச் சூட்டி மகிழ்ந்தவர்.

செவ்வைச்சூடுவார் = விண்டு பாகவத ஆசிரியர். இதனைப் பாகவதம் என்றும் கூறுவர். இவர் வேம்பத்தூர்வாசி. வைணவ பிராமணர். கி.பி.16ஆம் நூற்றாண்டு.

சே

சேக்கிழார் = அருள்மொழித் தேவர் என்ற பெயரும் இவருக்கு உண்டு. ஆதலின் அருள்மொழித் தேவர் என்ற இடத்துக் காண்க. சேக்கிழார் மரபு, வேளாளர் மரபுகளில் ஒன்று. அம் மரபில் சிறந்து விளங்கினமை பற்றி இப்பெயரால் இவர் குறிப்பிடப்பட்டார். காலம் 12ஆம் நூற்றாண்டு.

சேதிராயர் = சேதிநாட்டு மண்ணர் மரபினர். திருவிசைப்பாப் பாடியவர்களுள் ஒருவர். கி.பி.11 ஆம் நூற்றாண்டு.

சேந்தனார் = ஒன்பதாம் திருமுறையில் உள்ள திருப்பல்லாண்டு என்னும் திருப்பாடல்களுக்கும், திருவிசைப்பாவில் உள்ள பாடல்கள் சிலவற்றிற்கும் ஆசிரியர். பட்டினத்தாரின் நிதிமந்திரியார் என்று கருதப்படுபவர். கருவூலத்தில் இருந்த பொருள்களைப் பட்டினத்தார் உத்தரவுப்படி சூறையிட்டவர். அதன் காரணமாக அவர் காலத்து மன்னனால் சிறை செய்யப்பட்டவர். பின்னர்ப் பட்டினத்