பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/598

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சோழன் நலங்கிள்ளி

594

தத்துவராய சுவாமிகள்


பானைப் பாடிய பாடல் புறத்தில் ஒன்று உண்டு. இவரைப் பல சங்ககாலப் புலவர்கள் பாடியுள்ளார். 

சோழன் நலங்கிள்ளி = இவர் சோழ மன்னர் மரபினர். கவியும் பாட வல்லவர். கடைச்சங்க காலத்தவர். இவரைச் சேட்சென்னி என்றும், மாவளத்தான் என்றும், புட்பகை என்றும், தேர்வளர்கிள்ளி என்றும் கூறுவர். நெடுங்கிள்ளிக்குப் பகைவர். பாண்டியநாட்டு ஏழ் அரண்களை வென்று தம் புலிக்கொடியை நாட்டியவர். பின்னர் உறையூர் முதுகண்ணன் சாத்தனாரால் அறிவுறுத்தப்பட்டு அறம் செய்தலை மேற்கொண்டவர். இவர் பாடியனவாகப் புறத்தில் இரண்டு செய்யுட்கள் உள.

ஞானசம்பந்த தேசிகர் = இவர் சைவ வேளாளர். ஸ்ரீ வில்லிபுத்தூரில் பிறந்தவர். இவர் பல நூல்களைப் பாடியவர். அவற்றுள் சிவபோகசாரம், முத்தி நிச்சயம், திரிபதார்த்த தசகாரிய அகவல் குறிப்பிடத்தக்கவை. காலம் கி.பி.16ஆம் நூற்றாண்டு.

ஞா

ஞானப்பிரகாச தேசிகர் = யாழ்ப்பாணத்தில் உள்ள திருநெல்வேலியில் பிறந்தவர். நல்ல இலக்கண இலக்கிய வடமொழிப் புலமையுடையவர். இவர் பெளட்கர ஆகமத்திற்கும், சிவஞான சித்தியார் சுபக்கத்துக்கும் உரை எழுதியவர். திருவண்ணாமலையில் சைவ மடத் தலைவராக இருந்தவர். சிதம்பரத்தில் இவர் ஒரு குளம் வெட்டுவித்தார். அதுவே ஞானப்பிரகாசர் குளம் என்பது. கி.பி. 17ஆம் நூற்றாண்டு.

தண்டி = இவர் தாராபுர போசராஜ மன்னன் அவைக்களப் புலவர். இவரை அம்பிகாபதியின் குமாரர் என்றும் கூறுவர். இவர் செய்த நூல் அலங்காரம் என்பது. இதனைத் தண்டி அலங்காரம் என்றும் கூறுவர். இவரது காலம் கி.பி. 12ஆம் நூற்றாண்டு.

தத்துவராய சுவாமிகள் = இவர் வேதியர். சோழ நாட்டு வீரை என்னும்