பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/599

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாமோதரம் பிள்ளை

595

திருத்தக்க தேவர்


ஊரினர். இவர் சொரூபானந்தர் என்பாரின் மாணவர். இவர் பல நூல்களைப் பாடியுள்ளார். அவற்றுள் சில ஈசுரக்கீதை, பிரமகீதை, பாடுதுறை, குறுந்திரட்டு, பெருந்திரட்டு, அஞ்ஞைவதைப் பரணி, மோகவதைப் பரணி, நெஞ்சுவிடு தூது, திருத்தாலாட்டு முதலியன. கி.பி. 16 ஆம் நூற்றாண்டு.

தா

தாமோதரம் பிள்ளை = இவர் பி.ஏ. பி.எல். பட்டம் பெற்றவர். யாழ்ப்பாணத்தார். ஏழாலை என்னும் ஊரில் பிறந்தவர். இவரது போதகாசிரியர் சுன்னாகம் முத்துக்குமாரக் கவிராயர். புதுக்கோட்டையில் நீதிபதியாக இருந்தவர். பழந்தமிழ் நூல்களை ஏடு தேடிப் பதித்த பெரியார். வீரசோழியம், இறையனார் அகப்பொருள் உரை, தொல்காப்பியப் பொருளதிகாரம், இலக்கண விளக்கம், சூளாமணி, கலித்தொகை, தணிகைப் புராணம், தொல்காப்பிய சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரை முதலான நூல்களைப் பதிப்பித்தவர். அப்பதிப்புக்களின் முகவுரைகளில் இவரது ஆராய்ச்சிப் புலமையினை நன்கு அறியலாம். இவர் சைவ மககத்துவம் என்னும் நூலையும் இயற்றியவர். கி.பி. 19ஆம் நூற்றாண்டு.

தாயுமான சுவாமிகள் = இவர் சைவவேளாளர். வேதாரண்யம் கேடிலியப்பப் பிள்ளையின் திருமகனார். மெளனகுரு இவரது ஆசிரியர். திரிசிரபுர விசயரகுநாத சொக்கலிங்க நாயக்கரிடம் அரசாங்க அலுவலில் இருந்தவர். திருமணம் முடித்து இல்லறம் நடத்தி ஒரு குழந்தை பிறந்ததும், துறவிக்கோலம் பூண்டவர். இவரது நூல் தாயுமானவர் பாடல் எனப்படும். கி.பி.18ஆம் நூற்றாண்டு.

தி

திருக்கடவூர் உய்யவந்ததேவ நாயனார் = இவர் ஆளுடைய தேவநாயனார், திருவியலூர் உய்யவந்ததேவ நாயனார் ஆகிய இருவரிடமும் ஞான அறிவு பெற்றவர். திருக்களிற்றுப்படியார் என்னும் நூலைப் பாடியவர். கி. பி. 12 ஆம் நூற்றாண்டு.

திருத்தக்க தேவர் = இவர் சமண சமயத்தவர்.