பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஈதி

57

ஈன்றணிமை


ஈதி = அதிக மழை, மழையின்மை, எலி, விட்டில், கிளி, அரசன்மை ஆகிய ஆறினால் நாட்டுக்கு வரும் தீங்கு
ஈதை = துன்பம்
ஈநாயம் = இழிவு
ஈப்பிணி = உலோபி
ஈமக்கடன் = பிணம் சுடல் முதலிய கடமைகள்
ஈமத்தாடி = சிவன்
ஈமம் = சுடுகாடு, பிணம் சுடும் விறகு, இடுகாடு, பாதிரிப் பூ
ஈயம் = வங்கம், பாதிரி
ஈரங்கோலியர் = வண்ணார்
ஈரடி = சந்தேகம், இரண்டடி
ஈரணி = மகளிர் நீராடும்போது அணிதற்குரியவை
ஈரப்பகை = இரக்கம்
ஈரம் = அன்பு, குளிர்ச்சி, தயை, நனைவு, குங்குமப்பூ, அருள், வெள்ளரி, பசுமை
ஈரல் = வருந்துகை
ஈரி = கங்தை, மகளிர் விளையாட்டில் ஒன்று
ஈருள் = ஈரல்
ஈரொட்டு = நிச்சயம் இல்லாமை
ஈர் = இரண்டு, ஈரம், பசுமை, குளிர்ச்சி, நெய்ப்பு, இனிமை, பேன் முட்டை, நுண்மை, ஈர்க்கு, இறகு
ஈர்ங்கண் = குளிர்ந்த இடம்
ஈர்ங்கதிர் = சந்திரன்
ஈர்ங்கை = உண்டு கழுவியகை
ஈர்ஷை = பொறாமை
ஈர்த்தல் = இழுத்தல், உரித்தல், பிளத்தல், அறுத்தல் , கூர்மையாதல், எழுதுதல்
ஈர்ந்தார் = ஈரமுடைய மாலை
ஈர்மை = குளிர்ச்சி, பெருமை, நுண்மை, வருத்தம்
ஈவு = கொடை, வரம், மீதி
ஈழதண்டம் = வண்டியின் ஏர்க்கால்
ஈழமண்டலம் = இலங்கை
ஈழம் = கள், பொன், சிங்களதேசம், கள்ளி
ஈழை = காச நோய், கோழை
ஈறல் = நெருக்கம், துக்கம்
ஈறு = எல்லை, முடிவு, மரணம்
ஈற்று = மரக்கன்று, ஈனுதல்
ஈற்றேறுதல் = கதிர் விடுதல், கதிர் முதிர்தல்
ஈனல் = கதிர்
ஈனுதல் = பெறுதல், காய்த்தல், உண்டாக்குதல், விடுதல், தருதல்
ஈன் = இவ்வுலகம், பெறுதல், இவ்விடம்
ஈன்றணிமை = சமீபகாலத்தில் பெற்றெடுக்கப் பட்டமை