பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/601

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருமாளிகைத் தேவர்

597

திருவள்ளுவர்


உள்ள பெருமாள் கேட்டனர் என்ற காரணத்தால் அப்பெருமாளைச் சொன்னவண்ணம் செய்த பெருமாள் என்றும் கூறுவர். இவர் பாடியவை. திருச்சந்தவிருத்தம், நான்முகன் திருவந்தாதி என்பன. இவை நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் உள்ளன. காலம் கி.பி. 8ஆம் நூற்றாண்டு.

திருமாளிகைத் தேவர் = இவர் சைவத் திருமுறைகளில் உள்ள ஒன்பதாம் திருமுறைகளில் காணப்படும் திருவிசைப்பாக்களின் ஆசிரியருள் ஒருவர். திருவாவடுதுறையில் இருந்தவர். இவரைப் போகமுனிவர் மாணவர் என்பர். இவர் சிதம்பரம் சென்று ஓடாது தடைப்பட்ட தேரை ஓடச் செய்த சித்தர். இவரது கோயில் திருவாவடுதுறைத் திருமடத்தில் உள்ளது. கி.பி. 11 ஆம் நூற்றாண்டு.

திருமூலர் = அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். சித்தரும் சிவயோகியும் ஆவார். மூலன் என்னும் இடையன் திடீர் என்று இறக்க அவன் மேய்த்து வந்த ஆடுமாடுகள் வருந்தும் நிலைகண்டு, அவன் உடலில் புகுந்து ஆடுமாடுகளுக்கு இன்பம் வரச் செய்தவர். பின்னர் அப்படியே அம்மூலன் வடிவில் இருந்து ஆகமங்களின் சாரமான திருமந்திரங்களை எழுதியவர். அதுவே திருமூலர் திருமந்திரம் எனப்படும். திருவாவடுதுறையில் இவரது கோயில் உண்டு. கி.பி. 5ஆம் நூற்றாண்டு.

திருவள்ளுவர் = இவர் ஆதிபகவன் என்பாரின் பிள்ளை என்பர். இவரை வள்ளுவர் குடியினர் எடுத்து வளர்த்தனர் என்பர். மதுரையில் பிறந்து மயிலையில் வாழ்ந்தனர் என்பர். மயிலாபபூரில் இவருக்கு ஒரு கோயில் உண்டு. இவர் வாசுகி அம்மையாருடன் இல்லறம் நடத்தினர். இவரது மாணவர் ஏலேலசிங்கர் என்பவர். இவரைப்பற்றிய வரலாறுகள் பலவாகும். இவர் சைவர் என்பதற்கு அடையாளமாக இவரது கோயில் சைவர்களால் பூசிக்கப்பட்டு வருவதாலும், நாயனார் என்ற பெயராலும் அறியலாம். இவர் முதற் குறளில் ஆதிபகவன் என்று கூறியிருப்