பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/605

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்பியாண்டார் நம்பி

601

நம்மாழ்வார்


நூல் பல எழுதியவர். பெருஞ்செல்வம் திரட்டியவர். சென்னையில் செந்தோமில் சிறக்க வாழ்ந்தவர். உதார குணமுடையவர். தணிகைப் புராணம், இளம்பூரணம் சொல்லதிகாரம், முதலான நூற்களைப் பதிப்பித்தவர். ஓர் அணா வரிசை எனப் புலவர் வறுமை, கண்ணப்பர், நளன், அரிச்சந்திரன், முதலான உரைநடை நூல்களை எழுதியவர். பிரிதிவிராசன் என்னும் நாடக நூலையும் எழுதியவர். காலம் கி.பி. 20 ஆம் நூற்றாண்டு.

நம்பியாண்டார் நம்பி = இவர் தமிழ் வேதவியாசர் எனக் கூறப்படுபவர். இவரே சைவத் திருமுறைகளைத் தொகுத்தவர். திருநாரையூர்ப் பொல்லாப் பிள்ளையார் திருவருள் பெற்றவர். ஆதி சைவ பிராமண வகுப்பினர். இவர் பாடிய நூற்கள் திருத்தொண்டர் திருவந்தாதி, கோயில் திருப்பணியர் விருத்தம், திருச்சண்பை விருத்தம், திருக்கலம்பகம், திருநாவுக்கரசர் ஏகாதசமாலை முதலியன. கி.பி. 10ஆம் நூற்றாண்டு.

76

நம்மாழ்வார் = இவர் சடகோபர், மாறர் என்றும் கூறப்படுபவர். வைணவ சமய வேளாள மரபினர். திருநெல்வேலி ஆழ்வார் திருநகரியில் பிறந்தவர். ஆழ்வார்களில் தலைசிறந்தவர். புளிய மரத்தடியில் அமர்ந்து யோகம் புரிந்து திருமால் திருவருள் பெற்றவர். திருமால் இவர் மீது பற்றுடையவர் என்பது கம்பரை நோக்கி "நந்தம் சடகோபனைப் பாடினையோ?" என்று கேட்டதால் விளங்குகிறது. இவர் பாடிய பாடல்கள் வேதத்தின் சாரம் எனப்படும். இவரைப் போற்றியே மதுரகவியாழ்வார் திருமாலின் திருவருள் பெற்றார். இவர் பாடிய பாடல்கள் திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி, திருவிருத்தம் என்பன.

நரிவெரூஉத்தலையார் = இவர் உடல் விகாரம் உடையவர் போலும். இவரது தலையைக் கண்டால் நரியும் பயப்படும் என்ற காரணத்தால் இப்பெயர் பெற்றார் என்று கருதப்படுகிறது. இவ் விகார சொரூபம் சேரமான் கருவூர் ஏரிய ஒள்வாள்