பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/608

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பட்டினத்தடிகள்

604

பதுமனார்


இனத்துப் பெருவள்ளலாகிய சீதக்காதி என்பாரையும் பாடிய பாவலர். இவர் பாடிய வேறு நூற்கள் வேளூர்க் கலம்பகம், உமைபாகர் பதிகம் முதலியன. கி.பி. 11ஆம் நூற்றாண்டு. பல தனிப்பாடல்களையும் இவர் பாடியுள்ளார்.”

பட்டினத்தடிகள் = இவர் திருவெண்காடர் என்றும் கூறப்படுபவர். காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்தவர். வாணிபம் செய்து பெரும்பொருள் ஈட்டியவர். இவரை யாட்கொள்ள இறைவரே சிலகாலம் பிள்ளையாக வந்து இருந்தார் என்றும் கூறுவர். அரசர் மெச்சச் சிறக்க வாழ்ந்தவர். பின்னர்த் துறவு உள்ளம் கொண்டு எல்லாச் செல்வச் சிறப்பினையும் உதறித்தள்ளி வெளியேறியவர். இவரது மாணவர் பத்திரகிரியார். இவர் திருவொற்றியூரில் சமாதி நிலையுற்றவர். அதனை இன்னும் அங்குக் காணலாம். இவர் பாடிய நூற்கள் கோயில் நான்மணி மாலை, திருக்கழுமல மும்மணிக் கோவை, திருவேகம்பமுடையார் திருவந்தாதி, திருவொற்றியூர் இருபா இருபஃது என்பன. இவை பதினோராம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன. இவர் காலம் 10 ஆம் நூற்றாண்டு. இவர் பெயர்கொண்ட மற்றொரு பட்டினத்தார் இருந்ததாகவும் தெரிகிறது. அவர் பாடிய நூலே பட்டினத்தார் பாடல் என்ற தொகுப்பு நூலாகும். இதில் உள்ள பாடல்கள் பதினோராம் திருமுறையில் சேர்க்கப்பட்டில, அதில் குலாம் என்ற இந்துஸ்தான் வார்த்தை இருப்பதிலிருந்தே அது பிற்பட்ட நூல் என்பது தெரிகிறது. இதன் காலம் கி.பி. 15ஆம் நூற்றாண்டு என்னலாம்.

பண்டிதர் சவிராய பிள்ளை = இவர் திரிசிரபுரம் செயிண்ட் ஜோசப் கல்லூரியின் தமிழாசிரியர். கிறித்தவச் சமயத்தவர். டமிலியன் ஆண்டிக்யூரி என்னும் இதழுக்கு ஆசிரியர். தமிழர் ஆரியர் கலப்பு, சங்க காலம் என்னும் கட்டுரைகளை எழுதியவர். நல்ல ஆராய்ச்சிப் புலமையுடையவர். கி.பி. 20ஆம் நூற்றாண்டு.

பதுமனார் = இவர் ஓர் உரையாசிரியர். இவரே நாலடியார் என்னும் நூலைத்