பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/611

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாண்டியன்

607

பிள்ளைப் பெருமாள்


பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் = கோவலனது கொலைக்குக் காரணர். ஆரியப்படைகளை வென்றவர். கல்வியில் பெரிதும் கருத்துடையவர். கடைச்சங்க காலத்தவர். புறத்தில் இவரது பாடல் ஒன்று உண்டு.

பாரதம் பாடிய பெருந்தேவனார் = கடைச்சங்க காலத்தவர். இவர் பாடிய நூல் பாரதம். இது அன்றிச் சங்க நூற்களின் பகுதியாகிய எட்டுத்தொகை நூற்களான அகம், புறம், ஐங்குறுநூறு, நற்றிணை, குறுந்தொகை யாகியவற்றிற்கு முதற்கண் கடவுள் வாழ்த்துப் பாடி அமைந்தவர். இவர் பாரத வெண்பா பாடிய பெருந்தேவனாரினும் வேறானவர். திருவள்ளுவ மாலையில் இவர் பாடிய பாடல் ஒன்று உண்டு.

பி

பிசிராந்தையார் = கடைச்சங்க காலத்தவர் கோப்பெருஞ் சோழனது உயிர் நண்பர். அவன் இறந்த போது அவனோடு இறந்தவர். பாண்டிய நாட்டில் பிசிர் என்னும் ஊரில் பிறந்தவர். இவரது குமாரர் ஆதன் தந்தையார் என்பது ஆந்தையார் என மருவி ஊர்ப்பெயரையும் இணைத்துப் பிசிராந்தையார் எனப்பட்டவர். இவரது பாடல்கள் அகத்தில் 1, நற்றிணையில் 1, புறத்தில் 1 உள்ளன.

பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் = இவர் வைணவப் பிராமணர். அழகிய மணவாள தாசர் என்றும் கூறப்படுவர். திருவரங்க நாதனிடம் மிகுந்த ஈடுபாடுடையவர். இவர் பாடல்களின் சுவையைக் கண்ட திருவேங்கடநாதன் தன் மீது பாடும்படி கேட்க அரங்கனைப் பாடிய வாயால் குரங்கனைப் பாடேன்' என்று கூறியவர். பின்னர்த் திருவேங்கடநாதனால் வயிற்று வலி கண்டு, அது தீர அந்நாதன் மீது சில நூல்களைப் பாடியவர். திருமலை நாயகன் காலத்தில் திகழ்ந்தவர். இவர் பாடிய நூற்களின் தொகுதியே அஷ்டப் பிரபந்தம் எனப்படும். அதில் அடங்கிய நூற்கள், அழகர் அந்தாதி, திருவரங்கக் கலம்பகம், திருவரங்க மாலை, திருரங்கத் தந்தாதி, திருவேங்