பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/613

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூரணலிங்கம் பிள்ளை

609

பெருந்தலைச்சாத்தனார்


பாடலில் விதவைகள் எப்படித் தம் வாழ்க்கையை நடத்தவேண்டும் என்பது கூறப்பட்டுள்ளது. இவர் பாடல் ஒன்று புறத்தில் உளது.

பூரணலிங்கம் பிள்ளை = இவர் திருநெல்வேலி முந்நீர்ப் பள்ளம் என்னும் ஊரினர். பி.ஏ.எல்.டி. பட்டங்களைப் பெற்றவர். திரிசிரபுரத்தில் ஆங்கிலப் பேராசிரியராக இருந்தவர். தமிழ் இந்தியா, தமிழ் இலக்கிய வரலாறு, மாணிக்கவாசகரின் வாழ்க்கையும் உபதேசங்களும் என்னும் நூற்களின் ஆசிரியர். திருக்குறளைப் பற்றியும் ஆய்ந்து நூல் எழுதியவர். இராவணனைப் பற்றியும் ஆய்வு நூல் வரைந்தவர். கி.பி. 20ஆம் நூற்றாண்டு.

பெ

பெரியவாச்சான் பிள்ளை = இவர் வைணவர். சிறந்த உரையாசிரியர். இவரது உரையில் வடமொழிக் கலப்பு மிகுதியும் உண்டு. ஆதலின் அதனை மணிப்பிரவாளநடை என்று கூறுவர். இவர் நம்பிள்ளை என்பாரின் மாணவர். இவர் 24,000 படி கத்திய உரை, திவ்யபிரபந்த 77 உரை, அமலநாதிப் பிரான் வியாக்கியானம் முதலானவற்றை எழுதியவர். கி.பி. 15ஆம் நூற்றாண்டு.

பெரியாழ்வார் = இவர் பாண்டிய நாட்டில் ஸ்ரீவில்லிபுத்தூரில் வடமலையப்பனைத் திருத்துளசி மாலை கட்டி வழிபட்ட சிறந்த வைஷ்ணவ பிராமணர். பன்னிரண்டு ஆழ்வார்களில் இவர் ஒருவர். வில்லிபுத்தூர் ஆழ்வார் என்ற திருப்பெயரும் உடையவர். ஸ்ரீ ஆண்டாள் அம்மையாரை வளர்ப்புப் பெண்ணாகப் பெற்றவர். மதுரை வல்லப தேவ மன்னன் காலத்தவர். அவன் முன்னிலையில் வைணவ மதத்தின் ஏற்றத்தைக் கூறிப் பொற்கிழியினைப் பெற்றவர். இவர் பாடிய பாடல்கள் பெரியாழ்வார் திருமொழி, திருப்பல்லாண்டு என்பன. கி. பி. 9 ஆம் நூற்றாண்டு.

பெருந்தலைச்சாத்தனார் = இவர் கடைச்சங்க காலத்தவர். குமணனைப் பாடிப் பரிசில் பெற்றவர். அவன் தலையைக் காத்தமை