பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/616

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மணவாள முனிவர்

612

மதுரகவியாழ்வார்


சிறந்தவர்கள் என்பதை அவர்களிடம் உள்ள பல ஒழுக்க நூல்களால் உணரலாம்" என்ற உத்தமர். திருக்குறள், திருவாசகம், நாலடியார் முதலானவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உரை கண்டவர். இவரையே டாக்டர். ஜி.யு.போப் என்பர். பாதிரியார் பணியினை மேற்கொண்டவர். கி.பி.19ஆம் நூற்றறாண்டு.

மணவாளமுனிவர் = இவர் பெரிய சீயர் என்ற பெருமை பெற்றவர். தென்கலை வைணவர்கட்குத் தலைவர். "மணவாளமா முனியே இன்னும் ஒரு நூற்றாண்டிரும்" என்று வைணவர்கள் வாழ்த்தும் சிறப்புப்பெற்றவர். இவர் பாண்டிய நாட்டுச் சிக்கில் கிடாரம் என்னும் ஊரில் பிறந்தவர். முன்னர் அரசாங்க அலுவலில் அமர்ந்து பின்னர்த் துறவு நெறியை மேற்கொண்டவர். இவர் திருமந்திரத்திற்கு வியாக்கியானமும், திருவாய்மொழி நூற்றந்தாதியும், ஸ்ரீவசனபூஷண வியாக்கியானமும், பெரியாழ்வார் திருமொழி வியாக்யானமும் முதலானவற்றையும் செய்துள்ளார். கி.பி.15ஆம் நூற்றாண்டு.

மண்டல புருடர் = தொண்டை மண்டலம் வீரை என்னும் ஊரிற் பிறந்தவர். சைன சமயத்தவர். இவரே சூடாமணி நிகண்டு என்னும் நூலை இயற்றியவர். ஸ்ரீபுராணம் என்னும் நூலையும் இயற்றியுள்ளார், கிருஷ்ணதேவராயர் காலத்தவர். சூடாமணி உள்ளமுடையான் என்னும் நூல் செய்ததாகவும் கூறப்படுகிறது. கி.பி.16ஆம் நூற்றாண்டு.

மதிவாணனார் = இவர் மன்னர் மரபினர். கடைச்சங்க காலத்தவர். நூல் இயற்றும் வன்மையும் படைத்தவர். இவர் செய்தநூல் மதிவாணனார் நாடகத் தமிழ் என்பது. இதனைக் கூத்த நூல் என்றும் கூறுவர்.

மதுரகவியாழ்வார் = வைணவ ஆழ்வார் பன்னிருவருள் ஒருவர். நம்மாழ்வாரையே போற்றி முத்தி பெற்றவர். பாண்டிய நாட்டில் திருக்கோளூர் என்னும் ஊரில் பிறந்தவர். மதுரமாகக் கவி பாடவல்லவர். அந்தண