பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/617

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மதுரைக்கணக்காயனார்

613

மறைஞானசம்பந்தர்


மரபினர். கி. பி. 9 ஆம் நூற்றாண்டு.

மதுரைக்கணக்காயனார் = இவர் மதுரைவாசி. வேளாப் பார்ப்பனர் குடியினர். ஆசிரியர் தொழிலை மேற்கொண்டவர். நக்கீரரைத் திருமகனாராகப் பெறும் பேறு பெற்றவர். அகத்தில் 3, நற்றிணையில் 1, புறத்தில் 1, ஆக 5 பாடல்கள் உள. கடைச்சங்க காலத்தவர்.

மத்தான் சாயபு = இவர் முஸ்லீம் இனத்தவர். தமிழ் பயின்று பாடும் ஆற்றல் படைத்தவர். திருச்சிராப்பள்ளியில் அத்தர் வாணிபம் செய்து வந்தவர். வாலை வழிபாட்டினர். இதன் காரணமாகச் சித்தர் என்றும் கருதப்பட்டவர். குணங்குடி மஸ்த்தான் சாயபு என்றும் இவரைக் கூறுவர். இவரது பாடல்கள் தாயுமானவர் பாடல் போன்று காணப்படும். இவர் அகத்தீசர் சதகம், நந்தீசர் சதகம், கிறிஸ்த்து மத கண்டனம், வச்சிரதண்டம் முதலான நூற்களை இயற்றியவர். கி.பி.19ஆம் நூற்றாண்டு.

மயிலேறும் பெருமாள் பிள்ளை = இவர் திருநெல்வேலியில் வேளாளர் மரபில் பிறந்தவர். இவர் இலக்கணக்கொத்து ஈசான தேசிகர்க்கு ஆசிரியர். கல்லாடம் 37 பாடல்களுக்கு உரைகண்டவர். தொல்காப்பியம், குறள் முதலானவற்றிற்கும் உரை எழுதி இருப்பதாகக் கூறுவர். கி.பி.17 ஆம் நூற்றாண்டு.

மயிலைநாதர் = இவர் ஓர் உரையாசிரியர். சைன சமயத்தவர். நன்னூலுக்கு உரை எழுதியவர். கி. பி. 13 ஆம் நூற்றாண்டு.

மருத்துவன் தாமோதரனார் = இவர் வைத்தியமும் நன்கு தெரிந்தவர். உறையூரில் பிறந்தவர். வைணவ நெறியினர். கடைச்சங்க காலத்தவர். கூலவாணிகச் சீத்தலைச் சாத்தனார்க்குத் தலையில் சீழ் வடிந்த காரணத்தையும், அது தீர்ந்த காரணத்தையும் கூறியவர் இவரே ஆவார். இவர் பாடினவாகத் திருவள்ளுவ மாலையில் 1, அகத்தில் 2. புறத்தில் 3 பாடல்கள் உள.

மறைஞான சம்பந்தர் = இவர் திருக்களன் சேரியில் வேளாண்மரபில் உதித்த