பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/621

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மீனாட்சிசுந்தரம் பிள்ளை

617

முருகதாஸ் சுவாமிகள்


மீ

மீனாட்சிசுந்தரம் பிள்ளை = இவர் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை என்று கூறப்படுபவர். சைவ மரபினா். இவரது பெயரைக் குறிப்பிடாமல் பிள்ளையவா்கள் என்றே யாவரும் குறிப்பிட்டு வந்த பெருமை சான்றவா். இவா் இலட்சத்திற்கு மேல் கவிகளைப் பாடியவா். இவா் பாடியுள்ள தலபுராணங்களும் பிரபந்தங்களும் பலப்பலவாகும். திருச்சிராப்பள்ளியில் பிறந்து, திருவாவடுதுறை ஆதினத்தில் புலவராகத் திகழ்ந்தவா். இவரும் ஆறுமுக நாவலரும் ஒருகாலத்தவா். இவாிடம் கல்வி பயின்று பெருமை பெற்றவா் பலராவாா். தியாகராய செட்டியாா், டாக்டா் சுவாமிநாதய்யா், மாயூரம் வேதநாயகம் பிள்ளை, வல்லூர் தேவராச பிள்ளை முதலியாோ்கள் இவரது மாணவா்களே. இவா் இயற்றிய நுாற்களுள் சில சேக்கிழாா் பிள்ளைத் தமிழ், வாட்பாேக்கிக் கலம்பகம், திருத்தில்லை யமக அந்தாதி, தனியூர்ப் புராணம், காசி ரகசியம், திருவாருா்த் தியாகராயா் மாலை, திருவிடைமருதுாா் உலா முதலியன. கி.பி.19-ஆம் நுாற்றாண்டு.

மு

முத்துத்தாண்டவா் = இவா் சீா்காழி முத்துத் தாண்டவா் எனப்படுபவா். நட்டுவா் வகுப்பைச் சாா்ந்தவா். சிவனடியாராக விளங்கியவா். சிதம்பர சபாநாதா் மீதும் திருநாளைப்பாேவாா் மீதும் கீா்த்தனைகளைப் பாடியவா். கி.பி 18 ஆம் நுாற்றாண்டு

முரிஞ்சியூர் முடி நாகராயர் = முதற்சங்க கால புலவர். உதியஞ்சேரலாதன் கௌரவ பாண்டவர் போரிட்ட காலத்தில் இவ் விரு மன்னர்களின் படைகளுக்கும் சோறு கொடுத்து ஊக்கியதைப் பாடியவர். இவர் புறத்தில் பாடிய பாடல் ஒன்று உளது.

முருகதாஸ் சுவாமிகள் = இவரைத் திருப்புகழ்சாமி என்றும், வண்ணச்சாமி என்றும், தண்டபாணிச் சுவாமிகள் என்றும் கூறுவர். இவர் திருநெல்வேலி வேளாண் மரபினர். ஆமாத்தூரில் இறைவன் திருவடியினை யுற்றவர்.