பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/622

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மெய்கண்ட தேவர்

618

வரதுங்கராம பாண்டியர்


இவர் பாடிய நூற்கள் சென்னைக் கலம்பகம், ஒலியல் அந்தாதி, தமிழ்த் திருப்பதிகம், அறுவகை இலக்கணம், அருணகிரிநாதர் புராணம், திருமயிலைக் கலம்பகம் முதலியன. கி.பி. 19ஆம் நூற்றாண்டு.

மெ

மெய்கண்ட தேவர் = சந்தானாசாரியர் நால்வருள் முதன்மையானவர். அருணந்தி சிவாசாரியரின் ஞானாசாரியார். சிவஞான போதம் என்னும் ஒப்புயர்வற்ற நூலின் ஆசிரியர். இவர் அச்சுத களப்பாளர் திருமகனார். சைவ வேளாண் குடியினர். பெண்ணாகடத்தில் பிறந்தவர். இவரது ஞானாசாரியார் பரஞ்சோதி முனிவர். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் சுவேதவனப் பெருமாள் என்பது. காலம் கி.பி.13ஆம் நூற்றாண்டு. அருணந்தி சிவாசாரியர் முதல்முதல் இவரைச் சந்தித்தபோது,"ஆணவமலத்தின் சொரூபம் எத்தகையது?" என்று கேட்டதும், அவரையே ஏற இறங்கப் பார்த்துச் சும்மா இருந்து, அக் குறிப்பிலிருந்தே ஆணவமலத்தின் சொரூபத்தை அருணந்தி சிவாசாரியர் அறிந்து கொள்ளும் வண்ணம் செய்து, அவரது ஞானாசிரியராக விளங்கியவர்.

வடக்குத் திருப்பதிப்பிள்ளை = இவர் வைணவ சமயத்தவர். திருவாய்மொழிக்கு முப்பத்தாறாயிரப் படி உரை எழுதியர். இவரது திருக்குமாரரே பிள்ளை லோகாசாரியார் என்பவர். கி.பி.15ஆம் நூற்றாண்டு.

வண்ணக்களஞ்சியப் புலவர் = இவர் மதுரையைச் சார்ந்த மீசல் என்னும் ஊரினர். வண்ணணக் கவி பாடுவதில் வல்லவர். வடமொழியிலும் வல்லவர். மலையாளமும் தெரிந்தவர். பின்னர் நாகூரில் வாழ்ந்து அங்கேயே காலமானர். முகையதீன் புராணம் இயற்றியவர். இதன் காரணமாக ஒரு செல்வன் மகளைத் திருமணம் முடித்துச் சிறக்க வாழ்ந்தவர். கி.பி.18ஆம் நூற்றாண்டு.

வரதுங்கராம பாண்டியர் = இவர் மன்னர் மரபினர். சை சமயத்தவர். அதி