பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/623

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வரந்தருவார்

619

விபுலாநந்தர்


வீரராம பாண்டியரின் பெரிய தந்தையார் திருமகனார். இவர் பிரம்மோத்திர காண்டம், கருவையந்தாதி, கூர்மபுராணம் முதலான நூற்களை இயற்றியவர். இவரும் இவரது இளவலும் தமிழ்மொழிக்குத் தொண்டு செய்ததால், "பாண்டியில் இருவர் பட்டரில் இருவர்" என்ற பழமொழியும் எழலாயிற்று. ஈண்டுப் பட்டர் என்பவர் சிவஞான முனிவரும் கச்சியப்பரும். இவரது மனைவியாரும் கவி பாட வல்லவர். கி.பி. 16ஆம் நூற்றாண்டு.


வரந்தருவார் = இவர் பாரதம் பாடிய வில்லிபுத்தூராரின் திருமகனார். தம் தந்தையார் பாடிய பாரதத்திற்குச் சிறப்புப் பாயிரம் பாடியவர். கி.பி. 15 ஆம் நூற்றாண்டு.

வி

விசாகப்பெருமாள் ஐயர் = இவர் திருத்தணிகை கந்தப்பையரின் திருமகனார். சரவணப்பெருமாள் ஐயரின் உடன்பிறந்தவர். வீரசைவ மரபினர். சென்னை அரசினர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்தவர். இவர் நன்னூலுக்கு உரை எழுதியவர். யாப்பிலக்கண அணியிலக்க வினாவிடை என்னும் நூலையியற்றியவர். கி.பி.19ஆம் நூற்றாண்டு.

வித்தியாரண்யர் = இவர் பிராமண மரபினர். விசயநகரத்தில் பிறந்தவர். இவர் மாதவர் என்றும் குறிப்பிடப்பட்டவர். வித்தியாரண்யம் என்னும் நகர் மன்னனுக்கு மந்திரியாக இருந்தவர். இவர் சிருங்கேரி சங்கராசாரிய மடத்து 12 வது பட்டத்தைப் பெற்றவர். இவர் சதுர்வேத பாடியம், சங்கார் திக்குவிஜயம், கீதா தாற்பரியம் முதலான நூற்களைச் செய்தவர். கி.பி.13 ஆம் நூற்றாண்டு.

விபுலாநந்தர் = இவரது இயற்பெயர் மயில்வாகனப் பிள்ளை என்பது. யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். ஆங்கிலப்பட்டம் பெற்றவர். சைவசமய நூல்களில் நல்ல பயிற்சியுடையவர். சில காலம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகத் திகழ்ந்தவர். இராமகிருஷ்ண மடத்தைச்