பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/624

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வில்லிபுத்தூரார்

620

வீரமாமுனிவர்


சார்ந்து தொண்டாற்றியவர், துறவுக்கோலம் பூண்டவர். யாழ் நூல், மதங்க சூடாமணி என்னும் நூல்களை இயற்றியவர். கி.பி. 20 ஆம் நூற்றாண்டு.

வில்லிபுத்தூரார் = இவர் நடுநாட்டில் திருமுனைப்பாடியைச் சார்ந்த சனியூரில் பிறந்த வைணவ அந்தணர். சந்தக்கவி பாடுவதில் வல்லவர். தம்மோடு வாதம் செய்து தோற்றவர் காதை அறுத்துவந்தவர். இதனால்தான் "குறும்பியளவாகக் காதைத் தோண்டி, எட்டினமட்டும் அறுப்பதற்கு இங்கு வில்லி இல்லை" என்று ஒரு புலவரும் பாடினர். இவர் அருணகிரிநாதர் பாடிய கந்தர் அந்தாதிக்கு உரை கூறியவர். அதில் 34-வது கவிக்கு மட்டும் உரை கூறத் தெரியாது தோற்றார் என்று கூறுவர். சிறந்த ஆழ்ந்த வைணவப் பற்றுடையவராயினும், சிவபரத்துவம் கூறுவதில் சிறிதும் பின்வாங்காதவர். இதனை இவர் பாடிய பாரதத்தில் வரும் அருச்சுனன் தவநிலைச் சருக்கத்தில் நன்கு காணலாம். இவர் வைணவராக இருந்தும் திருமால் பன்றியாக வடிவு பூண்டு சிவபெருமான் திருவடிகளைக் காணச்சென்றதைப் பாடியிருப்பது கொண்டு உண்மையினை ஒளிக்காமல் கூறும் உத்தமர் என்பது தெரிகிறது. இவர் பாடிய நூல் பாரதம் என்பது. கி.பி.15ஆம் நூற்றாண்டு. வக்கபாகை வரபதி யாட்கொண்டானால் ஆதரிக்கப்பட்டு அவன் வேண்டுகோளுக்கு இணங்கிப் பாரதம் பாடியவர்.

வி

வீரகவிராயர் = இவர் பொற்கொல்லர் மரபைச் சார்ந்தவர். பாண்டிய நாட்டு நல்லூரில் பிறந்தவர். அதனால் இவரை நல்லூர் வீரகவிராயர் என்றும் கூறுபவர். அரிச்சந்திர புராணம் இவர் பாடியதே. காலம் கி. பி. 16 ஆம் நூற்றாண்டு.

வீரமாமுனிவர் = இவர் இத்தாலிய நாட்டுப் பாதிரியார். நம்நாடு வந்துற்றுத் தமது இயற்பெயராகிய ரெவரண்ட் பெஸ்கி என்பதையும் மாற்றி வீரமாமுனிவர் என்று சூட்டிக் கொண்டவர். காவியுடுத்தும், புலால் புசியாதி