பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/625

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியம்பலத்தம்பிரான்

621

வேதநாயகம் பிள்ளை


ருந்து பல்லக்கில் சென்றும், கட்டை மிதியடி அணிந்தும், சைவத்துறவி போல் தமிழ் நாட்டில் வாழ்ந்தவர். தமிழ் மொழியில் அளவு கடந்த பற்றுடையவர். இவர் பல நூல்களைத் தமிழில் செய்துள்ளார். அவை தேம்பாவணி, வேதியர் ஒழுக்கம், சதுர் அகராதி, தொன்னூல் விளக்கம், அவிவேக பூரண குருகதை, திருக்காவலூர் கலம்பகம் முதலியன. இவரைத் தைரியநாதர் என்றும் கூறுவர். கி.பி.18ஆம் நூற்றாண்டு.

வெ



வெள்ளியம்பலத்தம்பிரான் = இவர் சிறந்த புலவர். துறைமங்கலம் சிவப்பிகாசரின் ஞானாசிரியர். தருமபுர ஆதீனத்தைச் சார்ந்தவர். இவர் தமிழில் உள்ள சிறந்த நூற்களில் இடையிடையே தாம் சில பாடல்களைப் பாடிச் சேர்ந்தவர் என்றும் கூறுவர். அப்பாடல்களை "இடைச் செருகல்" என்றும் "வெள்ளிப் பாடல்கள்" என்றம் கூறி வருகின்றனர். இவர் முத்தி நிச்சயம், சிவஞான சித்தியார், மிருகேந்திர ஆகமம் முதலியவற்றிற்கு உரை எழுதியர். கி.பி.17ஆம் நூற்றாண்டு.

வே

வேங்கடசாமி நாட்டார் = இவர் சிறந்த சொற்பொழிவாற்றும் புலவர். ஆராய்ச்சி உரைநடை எழுதும் ஆற்றலும் படைத்தவர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகத் திகழ்ந்தவர். "நாட்டார் ஐயர்" என்று அழைக்கப்பட்டவர். திரிசிரபுரத்தில் திகழ்ந்தவர். திருவிளையாடற் புராணம், சிலப்பதிகாரம், அகநானூறு முதலான நூற்களுக்கு உரை எழுதியவர். கபிலர், நக்கீரர், முதலான உரைநடை நூல்களை எழுதியவர். கி.பி.20 ஆம் நூற்றாண்டு.

வேணாட்டடிகள் = வேணாட்டு மன்னர். வேணாடு என்பது தென் திருவிதாங்கூர் எனக் கருதப்படுகிறது. இவர் பாடிய பாடல் திருவிசைப்பாவில் உள்ளது. கி.பி.10 ஆம் நூற்றாண்டு.

வேதநாயகம் பிள்ளை = இவர் மாயவரத்தில் டிஸ்டிரிக்ட்